Vijay Devarkonda : ரூ.199 செருப்பு... சிம்பிள் டி-ஷர்ட்... எகானமி கிளாஸ்... பயணம் - விஜய் தேவரகொண்டாவுக்கு என்னப்பா ஆச்சு 


விஜய் தேவரகொண்டா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் "லிகர்". இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை  அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் இணையம் முழுவதும் அலைகளை உருவாக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். 


அடுத்தடுத்து ஹிட் படங்கள்:


அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில்  பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் நோட்டா, நடிகையர்  திலகம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்.


லிகர் திரைப்படம் :


விஜய் தேவரகொண்டா நடிப்பில் முன்னணி தெலுங்கு இயக்குனரான பூரி ஜகந்நாத் இயக்கத்தில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் "லிகர்". இதில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், விஷு ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் குத்துசண்டை வீரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் தேவரகொண்டா காதலையும் விளையாட்டையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது. பழம்பெரும் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ஆகஸ்ட் 25ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிக்கை வெளியாகியுள்ளது. 


சிம்ப்ளிஸிட்டி ஹீரோ :


வெளியீடு நறுக்கி கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் படக்குழுவினர் மும்மரமாக படத்தை விளம்பரப்படுத்துவதில் மும்மரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா லிகர் படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு ஆடம்பரத்தை துறந்து மிகவும் சாதாரணமாக காணப்படுகிறார். சமீபத்தில் படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவரும் படத்தின் விளம்பரத்திற்காக விமானத்தில் எகானமி வகுப்பில் பயணம் செய்துள்ளனர். அவர்களின் இந்த பணிவான மனப்பான்மை படத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பைனான்சியர்களில் ஒருவரான சார்மி கவுர் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். "தயாரிப்பாளர்கள் மற்றும் மக்களின் ஹீரோவான #லிகர் ஹீரோ விஜய் தேவரகொண்டா மற்றும் எங்கள் ராக்கிங்  பியூட்டி அனன்யா பாண்டே மற்றும் பூரி ஜகந்நாத் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார். 


 






 


பிரஸ் மீட்டில் ஷாக்:


சமீபத்தில் நடைபெற்ற பிரஸ் மீட்டில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா ரூ.199 செருப்பு மற்றும் சாதாரணமான டி-ஷர்ட் அணிந்திருந்தார். லிகர் திரைப்படம் ஒரு விளையாட்டு சம்மந்தப்பட்ட திரைப்படம். இதில் பல பிரச்சனைகள், தற்காப்பு கலை போராளியாக நடித்துள்ளார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொள்வதும் அது அவரின் விளையாட்டை எவ்வாறு தாக்கத்தை  ஏற்படுகிறது என்பதே இந்த கதையின் மைய பொருள் என்கின்றனர்.