மும்பை உள்ள இரசாயன மற்றும் உரங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது, இந்நிறுவனம் சானிடைஸர் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பொருட்களை தயாரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி: அலுவலர் (Officer(Marketing))

காலியிடங்கள்: 18 பதவிகள்

வயது வரம்பு என்ன?

34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் எவ்வளவு:

இந்தப் பணியில் சேர்பவர்களுக்கு மாதம் ரூ.40,000 முதல் 1,40,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

கல்வி தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க அறிவியல், பொறியியல், வேளாண்மை, வேளாண் வேதியியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட எதாவது ஒன்றில்  60 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மார்கெட்டிங், வேளாண் வணிக மேலாண்மை பிரிவில் எம்.பி.ஏ. தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம்  தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

எழுத்துத் தேர்வுக்கு ரூ.1000., விண்ணப்ப கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிக்கலாம்?

www.rcfitd.com    என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணபிக்க கடைசி தேதி:

12.08.2022

இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://www.rcfltd.com/hrrecruitment/recruitment-1 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர