கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், அடுத்தாக விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், கிங்ஸ் லீ உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.
விறுவிறுப்பாக நடந்து வந்த பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அப்போது விஜய்யுடன் நெல்சன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், பீஸ்ட் படத்தின் செட் புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின.
ஜனவரி 1, புத்தாண்டு தினத்தையொட்டி கடந்த வருடம், டிசம்பர் 31-ம் தேதி பீஸ்ட் படத்தின் புதிய லுக்கும் வெளியானது. அதில் படம் ஏப்ரல் மாதம் வெளியாகுமென குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி புத்தாண்டையொட்டி அப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகுமெனவும் தகவல் வெளியானது. ஆனால் பாடல் வெளியாகவில்லை. இந்நிலையில், படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டாக விஜய் படத்தின் டப்பிங் வேலைகளை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. டப்பிங் வேலையை அடுத்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.
ஏப்ரல் மாதம், திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியாகும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், ரிலீஸ் தேதி என்ன என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தமிழ் புத்தாண்டு பண்டிகையை அடுத்து ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும், ஏப்ரல் 14-ம் தேதியா அல்லது 28-ம் தேதியா என்பது உறுதியாகவில்லை. படம் வெளியாவதற்கு தயாராகி வருவதால், ப்ரொமோஷன் பணிகளும் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசரை ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். இதனால், படக்குழு அடுத்தடுத்து அப்டேட்டுகளை அறிவிக்க உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்