Vijay: வீட்டிலேயே தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடிய விஜய்... வெளியான புகைப்படம்

Vijay : நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் வீட்டிலேயே தேசிய கொடி ஏற்றி வைத்து சுதந்திர தினத்தை கொண்டாடினார்.

Continues below advertisement

 

Continues below advertisement

தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகராக விளங்கும் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்த முடிவை தெரிவித்ததுடன் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனி கட்சியை துவங்கினார். தற்போது அவர் ஒப்பந்தமாகியுள்ள படங்களை முடித்துவிட்டு நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு முழுவீச்சில் அரசியலில் இறங்க போவதையும் 2026 சட்டமன்ற தேர்தலில் களம் காண போவது பற்றியும் தெரிவித்து இருந்தார். 

 

 

அதற்கு தொடர்ந்து தன்னுடைய கட்சியின் நிர்வாகிகள் மூலம் பல மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பல சமூக பிரச்சினை சார்ந்த விஷயங்களுக்கு தன்னுடைய குரலை பதிவு செய்து வருகிறார். விரைவில் அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ளார். 

இந்நிலையில் இன்று இந்தியா முழுவதும் 78வது சுதந்திர தின கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அவர்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் போஸ்ட் ஒன்றை பகிர்ந்து அதன் மூலம் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அவருடைய பதிவில் "சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை கடந்து சமூக நல்லிணக்கத்தின் வேற்றுமையில் ஒற்றுமையோடும் நம் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட வீரர்களையும் தியாகிகளையும் நினைவு கூர்ந்து எந்நாளும் போற்றுவோம்!

 

 


எண்ணற்ற உயிர்களைத் தியாகம் செய்து போரடிப் பெற்ற இந்த விடுதலையைக் கொண்டாடி மகிழ்வோம்! நாட்டின் வளர்ச்சிக்காக என்றென்றும் பாடுபடுவோம்! அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! என தெரிவித்து இருந்தார். 


மேலும் சென்னை நீலாங்கரையில் உள்ள தன்னுடைய வீட்டிலேயே தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளார் நடிகர் விஜய். அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.   

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரைலருக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள். டிரைலர் குறித்த அப்டேட் இன்று வரும் நாளை வரும் என இழுபறியாக இருந்த ணியில் இன்று கண்டிப்பாக வந்துவிடும் என வெங்கட் பிரபு தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola