தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக கொண்டாட விஜய் வரும் ஜூன் 22ம் தேதி 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அவரின் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த வெற்றிப்படங்களை புதுப்பொலிவுடன் மேம்படுத்தப்பட்ட தரத்துடன் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 


 




கடந்த 2007ம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் விஜய், அசின், வடிவேலு, நாசர், நெப்போலியன், பிரகாஷ்ராஜ், ஸ்ரீமன் உள்ளிட்ட ஏராளமானோரின் நடிப்பில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பொறி பறக்க வைக்கும் வெற்றியை பெற்ற திரைப்படம் 'போக்கிரி'. காதல், ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி என அனைத்தின் கலவையாக ஒரு கம்ப்ளீட் மாஸ் என்டர்டெயின்மென்ட் படமாக வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வசூலிலும் பட்டையை கிளப்பியது. போக்கிரி படத்தின் தூள் கிளப்பும் பாடல்களும் காமெடி சீன்களும் இன்று வரை பிரபலமாக இருக்கின்றன. 


விஜய் 50வது பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜூன் 21ம் தேதி 'போக்கிரி' திரைப்படத்தை 4k டிஜிட்டல் தரத்தில் மேம்படுத்தி திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்துள்ளனர். இந்த சம்பவம் விஜய் ரசிகர்களின் சந்தோஷத்தை பலமடங்காக எகிற வைத்துள்ளது. 


சமீப காலமாக ரீ ரிலீஸ் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட விஜய்யின் 'கில்லி' திரைப்படம் இதுவரையில் எந்த ரீ ரிலீஸ் படங்களுக்கு செய்யாத அளவு சாதனையை செய்து வசூலை வாரி குவித்தது. 


 




வழக்கமாக விஜய்யின் புது ரிலீஸ் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை போல அவரின் ரீ ரிலீஸ் படங்களும் ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளில் ரசிகர்கள் எந்த அளவுக்கு என்ஜாய் செய்கிறார்கள் என்ற அந்த கொண்டாட்டங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டிங்காகி வருகிறது. 


கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 4k டிஜிட்டல் தரத்திலான 'போக்கிரி' படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி ஆர்வத்தை அதிகரித்துள்ளது. 


போக்கிரி படம் மட்டுமின்றி நடிகர் விஜய் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சூப்பர் ஹிட் படங்களான மெர்சல், கத்தி, அழகிய தமிழ் மகன், மாஸ்டர் உள்ளிட்ட படங்களும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கில்லி ரீ ரிலீஸ் வசூலையும் இப்படங்கள் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.