தி கோட்


விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் நான்கு நாட்களில் ரூ 288 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் வேறு எந்த தமிழ் நடிகரும் செய்யாத சாதனைக்கு உரியவராகி இருக்கிறார் விஜய். மெர்சல் முதல் தி கோட் வரை விஜய் நடித்த அடுத்தடுத்த 8 படங்கள் 200 கோடி வசூல் ஈட்டியுள்ளன. இந்த 8 படங்களின் வசூல் குறித்த தகவல்களைப் பார்க்கலாம். 


மெர்சல்


கடந்த 2017 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த படம் மெர்சல். தி கோட் படத்தைப் போலவே இப்படத்தில் விஜய் தந்தை மகன் என மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.  120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் 260 கோடி வசூல் செய்தது. 


சர்கார்


2018 ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம் சர்கார். துப்பாக்கி , கத்தி ஆகிய இரு படங்களின் வெற்றிக்குப் பின் மூன்றாவது முறையாக விஜய் முருகதாஸ் கூட்டணி இணைந்தது. 110 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் 265 கோடி வசூலித்தது. 


பிகில்


தி கோட் படத்தை தயாரித்துள்ள ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவான படம் பிகில். விஜய் மற்றும் அட்லீயின் மூன்றாவது கூட்டணியின் வெளியான இப்படம் 180 கோடி பட்ஜெட்டில் உருவானது. உலகளவில் இப்படம் ரூ 305 கோடி வசூலித்தது.


மாஸ்டர்


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்  நடித்த படம் மாஸ்டர். கொரோனா நோய்த் தொற்று பரவலுக்குப் பின் வெளியான போதும் திரையரங்கை நோக்கி மக்களை ஈர்த்தது மாஸ்டர் . 135 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் 300 கோடி வசூலித்தது.


பீஸ்ட்


லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து நெல்சன் திலிப் குமார் இயக்கிய படம் பீஸ்ட். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. 150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் 300 கோடி வசூலித்தது. 


வாரிசு


வம்சி படிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்த ஃபேமிலி என்டர்டெயினர் வாரிசு. அஜித் நடித்த துணிவு படத்துடன் களமிறங்கிய இப்படம் 310 கோடி உலகளவில் வசூல் செய்தது.


லியோ


இரண்டாவது முறையாக விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த படம் லியோ. கடந்த ஆண்டு வெளியான லியோ உலக்ளவில் 610 கோடி வசூல் செய்து அதிக வசூல் ஈட்டிய படங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 


தி கோட்


வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியான தி கோட் நான்கு நாட்களில் 288 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் வாரங்களில் படம் 500 கோடி வசூல் இலக்கை எட்டும் என எதிரபார்க்கப் படுகிறது