நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான  ‘பீஸ்ட்’ திரைப்படம் வருகிற 11 ஆம் தேதி ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தி மற்றும் பிறமொழிகளிலும், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பீஸ்ட் படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 


 










நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் கடந்த 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து படம் குறித்தான ட்ரோல்களும், மீம்களும் சமூகவலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. இருப்பினும் விஜய் ரசிகர்களால்  பீஸ்ட் திரைப்படம் இன்னும் திரையரங்குளில்  ஓடிக்கொண்டிருக்கிறது.


 






அண்மையில் வெளியான தகவலின் படி, படம் 200 கோடியை தாண்டி வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. அனிருத் இசையமைத்திருந்த இந்தப்படத்தில் அன்பறிவு சகோதரர்கள் சண்டை இயக்குநர்களாக பணியாற்றினர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.