கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கியிருக்கும் நெல்சன் திலீப்குமார் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், கிங்ஸ் லீ உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.
செல்வராகவன் இப்படத்தில் ஹேக்கராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, மால் ஒன்றை கைப்பற்றி தீவிரவாதிகள் சிறைபிடித்து வைத்திருக்கும் மக்களை காப்பாற்றுவதுதான் கதை எனவும் தகவல் வெளியானது.
விறுவிறுப்பாக நடந்துவந்த பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அப்போது விஜய்யுடன் நெல்சன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், பீஸ்ட் படத்தின் செட் புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின.
மேலும் புத்தாண்டு தினத்தையொட்டி கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் தேதி பீஸ்ட் படத்தின் புதிய லுக்கும் வெளியானது. அதில் படம் ஏப்ரல் மாதம் வெளியாகுமென குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி புத்தாண்டையொட்டி அப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகுமெனவும் தகவல் வெளியானது. ஆனால் பாடல் வெளியாகவில்லை.
இந்நிலையில் பீஸ்ட் படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன. அதேபோல் படத்தின் முதல் சிங்கிள் பாடல் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Janhvi Kapoor Bikini | அந்த பிகினி 17ஆயிரம் ரூபா.! இன்ஸ்டாவை பற்றவைத்த ஜான்வி! உடையை தேடிய ஃபேன்ஸ்!!