இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படம் 'ரத்தம்'. இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டாக டீசர் ரிலீஸ் குறித்த அற்புதமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி. இந்த தகவல் சோசியல் மீடியாவில் காட்டு தீ போல பரவி வருகிறது. 


 



ரத்தம் டீசரில் இணையும் மூன்று நண்பர்கள் :


விஜய் ஆண்டனி ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார் மற்றும் நந்திதா ஸ்வேதா என 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் டீசரில் சிறப்பு தோற்றத்தில் இடம் பெறுகிறார்கள் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான வெற்றிமாறன், பா. ரஞ்சித் மற்றும் வெங்கட் பிரபு என்ற தகவல் இன்று வெளியாகியுள்ளது. இவர்களின் கூட்டணியில் வெளியாகவிருக்கும் 'ரத்தம்' படத்தின் டீசர் வீடியோ வரும் டிசம்பர் 5ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது என்ற தகவலை வெளியிட்டிட்டு இருந்தார் நடிகர் விஜய் ஆண்டனி.  


 






 


எதிர்பார்ப்பை அதிகரித்த வீடியோ :


விஜய் ஆண்டனியின் மூன்று நண்பர்களின் கூட்டணியில் வெளியாக இருக்கும் டீசர் குறித்த அழகான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவின் பின்னணியில் ஒலிக்கும் 'ஒரு கூட்டு கிளியாக...'பாடல் மனதை வருடுகிறது. இந்த பாசப்பறவைகளின் கிளையில் நாங்களும் ஊஞ்சல் ஆடினோம். தற்போது ரத்தம் படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியானதில் இருந்து படத்தின் ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது. ரத்தம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இந்த டீசர் அப்டேட்டே இத்தனை அசத்தலாக இருக்கும் போது டீசர் எப்படி இருக்கும் என்று வியக்க ஆரம்பித்து விட்டார்கள் திரை ரசிகர்கள்.  


 






 


இசையமைப்பாளர் டு ஹீரோ ஜர்னி :


தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக முத்திரை பதித்து பல சுப்பர் டூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆண்டனி. குறிப்பாக அவரின் நாக்கு மூக்கா, மாக்கயால போன்ற பாடல்களை ரசிகர்கள் கொண்டாடினார்கள். வார்த்தைகளின் அர்த்தங்கள் புரியாவிட்டாலும் பாடல்களை மிகவும் ரசித்தனர். அப்படி பிரபலமான இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த விஜய் ஆண்டனி தனது தனித்துவமான இசையால் எந்த அளவிற்கு வேகமாக வளர்ந்தாரோ அதே வேகத்தில் கவனிக்கப்படாத ஒரு இசையமைப்பாளரானார். அதற்கு பிறகு அவரின் கவனம் நடிப்பின் மீது திரும்ப 2012ம் ஆண்டு நடிகராக 'நான்' திரைப்படம் மூலம் அறிமுகமானார். அடுத்தடுத்து பல வித்தியாசமான திரில்லர் திரைப்படங்களில் நடித்து வந்த விஜய் ஆண்டனிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் 'பிச்சைக்காரன்'. அவ்வப்போது தான் நடிக்கும் சில படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார் விஜய் ஆண்டனி. இருப்பினும் அவரது முழு கவனமும் நடிப்பில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.