நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 


கடந்த 2016 ஆம் ஆண்டு  விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘பிச்சைக்காரன்’.  சசி இயக்கிய இப்படத்தில் தீபா ராமானுஜம், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். நடிகர் விஜய் ஆண்டனியே இப்படத்தை சொந்தமாக தயாரித்திருந்தார். அம்மா சென்டிமென்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்தப் படம் தெலுங்கில் ‘பிச்சாகடு’ என்ற பெயரிலும், இந்தியில் ‘ரோட்சைட் ரவுடி’ என்ற பெயரிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.


சுமார் 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிச்சைக்காரன் திரைப்படம் ரூ.40 கோடிகளுக்கும் மேல் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் பிச்சைக்காரன் 2 குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை யாரும் எதிர்பாராத வகையில் விஜய் ஆண்டனி இயக்கியுள்ளார். மேலும் காவ்யா தாப்பர், யோகிபாபு, ஜான் விஜய், மன்சூர் அலிகான், ஹரீஷ் பரேடி, ராதாரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 




இந்த படம் முதலில் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. அதன்படி பாடல்கள், ட்ரெய்லர் எல்லாம் வெளியாகி ரசிகர்களையும் கவர்ந்தது. ரிலீசுக்கு சில நாட்கள் முன்பு  ராஜ கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை  தொடர்ந்தார். அதன்படி  பிச்சைக்காரன் 2 தன் ஆய்வுக்கூடம் படத்தி்ன் கதை எனவும், இதற்காக விஜய் ஆண்டனி ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதனால் படம் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.


இதுதொடர்பான வழக்கில் ஆய்வுக்கூடம் படத்துக்கும், பிச்சைக்காரன் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வேண்டுமென்றே படம் வெளியாவதைத் தடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் எனக்கு  பொருளாதார ரீதியாக எனக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டதோடு, மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாக விஜய் ஆண்டனி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன

 

இதற்கிடையில் சில தினங்களுக்கு பிச்சைக்காரன் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை வரவேற்பு பெற்றதோடு, படம் மே 19 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனவும் விஜய் ஆண்டனி அறிவித்திருந்தார். இந்த நிலையில் இப்படம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் படத்தை வெளியிட அனுமதி அளித்தனர். மேலும் படத்தின் வருவாய் தொடர்பான விவகாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். 



மேலும் படிக்க: Pichaikkaran 2 Trailer: தொழிலதிபர், குற்றவாளி, பக்திமான்..! விஜய் ஆண்டனியின் புதிய அவதாரம்..! பிச்சைக்காரன் 2 ட்ரெய்லர் ரிலீஸ்!