இந்து மக்களை புண்படுத்தும் விதமாக பிச்சைக்காரன்- 2 திரைப்படத்தின்  சர்ச்சைக்குரிய போஸ்டரை  வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் மன்னிப்பும் கேட்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.   


இது தொடர்பாக அக்கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் எம்.  சோலைகண்ணன் விடுந்துள்ள செய்திகுறிப்பில்,


"விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 பிட் போஸ்டரில் இந்து மக்கள் போற்றி வணங்கும் காளி மாதாவின் திருவுருவ படத்துடன் பிச்சைக்காரன் 2 என்ற எழுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த இந்து மக்களின் மனதை காயப்படுத்தும் வகையிலும்,மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும், மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், இந்துமத கடவுளை இழிவுபடுத்த வேண்டும் என்ற திட்டமிட்டு உள்நோக்கத்துடன் இந்த போஸ்டரை வடிவமைக்கப்பட்டுள்ளது போல் தெரிய வருகிறது.


 






திரைப்படம் என்ற போர்வையில் தொடர்ந்து இந்து மதத்திற்க்கு எதிராக மட்டும் இந்து தெய்வங்களை அசிங்கப்படுத்தும் விதமாக இது போன்ற போஸ்டர்களை வெளியிடும் திரைப்படத்துறையினரை மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி வண்மையாக கண்டிக்கிறது.


பிறந்த நாளில் இயக்குனர் அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி: : வெளியானது ‛பிச்சைக்காரன் 2’ போஸ்டர்!


இந்து கடவுள் படத்தை போட்டது போல் மற்ற மத கடவுளின் படத்தை போட்டு பிச்சைகாரன் 2 என்ற வார்த்தையை போட முடியுமா? அதற்கு உங்களுக்கு துணிவு இருக்கா? எதற்காக இந்துமத கடவுளை மட்டும் இழிவுபடுத்தும் வகையில் இது போன்ற போஸ்டர்களை வெளியிட்டு யாரை குளிர வைக்க பார்க்கிறீர்கள்? பணம் சம்பாதிக்க வேண்டுமென்றாலோ, விளம்பரம் தேடி கொள்ள ஆசைபட்டாலோ எத்தனையோ தொழில்கள் இருக்கும் பொழுது திரைப்படம் என்ற பெயரில் ஏன் இந்து சமயத்தை மட்டும் குறி வைத்து தாக்கப்பார்கிறீர்கள்?


இந்த போஸ்டரால் நாங்கள் உள்பட இந்துமக்கள் அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். ஆகவே இந்த சர்ச்சைக்குரிய போஸ்டரை வெளியிட்ட தங்கள் நிறுவனத்தின் சார்பில் ஒட்டுமொத்த இந்து மக்களிடம் உடனடியாக பத்திரிகை தொலைகாட்சி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக தகுந்த விளக்கமும் மன்னிப்பும் கேட்க வேண்டும். இந்த போஸ்டரை உடனடியாக அகற்றவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்".


இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.  இந்து மக்கள் கட்சியின் எதிர்ப்பால், விஜய் ஆண்டனியில் புதிய படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.