Vijay Antony Vs Sivakarthikeyan: டைட்டிலுக்காக சிவகார்த்திகேயனுடன் முட்டி மோதும் விஜய் ஆண்டனி! தீவிரம் அடைந்த ஸ்பெல்லிங் வார்!

சிவகார்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தின் டைட்டில் ஏற்கனவே தெலுங்கில் பதிவு செய்யப்பட்டு விட்டதாக விஜய் ஆண்டனி முட்டி மோதி வருகிறார்.

Continues below advertisement

சிவகார்த்திகேயனின் எஸ்கே25:

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் எஸ்கே 25. தற்காலிகமாக எஸ்கே25 என்று டைட்டில் வைக்கப்பட்ட இந்தப் படத்தின் டைட்டிலானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் கடந்த வாரம் வெளியானது. அதன்படி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் படமான 'பராசக்தி' என்ற டைட்டில் தான் சிவகார்த்திகேயனின் எஸ்கே25 படத்திற்கு வைத்துள்ளனர். 1952 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படம், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. படத்தின் டயலாக்கோ கதைக்கு பலமாக அமைந்தது.

Continues below advertisement

பராசக்தி:

கிட்டத்தட்ட 73 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் டைட்டிலை இப்போது சிவகார்த்திகேயனின் படத்திற்கு படக்குழுவினர் பயன்படுத்தியுள்ளனர். ரூ.250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் டைட்டில் வெளியான நிலையில் இன்று இந்த படத்தின் டீசர் வெளியானது.


விஜய் ஆண்டனி:

இந்த நிலையில் தான் இதே டைட்டிலை விஜய் ஆண்டனி படத்திற்கும் பயன்படுத்தியுள்ளனர். அதாவது, விஜய் ஆண்டனியின் 25ஆவது படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டது. அதில் இந்தப் படத்திற்கு சக்தி திருமகன் என்று டைட்டில் வைக்கப்பட்டது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் உருவாகி வருகிறது. தமிழில் சக்தி திருமகன் என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்திற்கு தெலுங்கில் பராசக்தி என்று டைட்டில் வைத்துள்ளனர்.

இது குழப்பத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வரும் நிலையில் தான் சில தினங்களுக்கு முன்பு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வெளியிட்ட அறிக்கையில் Paraashakthi பராசக்தி என்ற தெலுங்கு படத்தின் டைட்டிலுக்கு இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் விஜய் ஆண்டனி தான் உரிமையாளர் என்று குறிப்பிட்டுள்ளது. இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டது.

டான் பிக்சர்ஸ்:

அதன்படி, எங்களது பராசக்தி படமானது அன்றைய காலகட்டத்தில் சமூக அநீதிகளை எடுத்து காட்டி தமிழ் சினிமாவில் ஒரு அசைக்க முடியாத வகையில் சாதனையை நிகழ்த்தி 73 ஆண்டுகள் ஆகின்றன. இன்று டான் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இந்த பொறுப்பை கொடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அவர்களது கதையானது எங்களது பராசக்தி படத்தின் தலைப்பை மேலும், பிரகாசமாகவும், வருங்கால சந்ததியினருக்கு ஒரு ஊக்கமாக இருக்கும். ஏவிஎம் குடும்பத்தின் சார்பாக தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், அவர்களது பயணத்திற்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் சங்கம்:

இது குறித்து தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் சங்கமும் டான் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளது. PARASAKTHI என்ற படமானது தமிழிலிருந்து தெலுங்கில் டப் செய்யப்படுகிறது. இந்தப் படத்தின் டைட்டில் கடந்த 11ம் தேதியே தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதற்கான உரிமை வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி வரையில் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

விஜய் ஆண்டனி Vs சிவகார்த்திகேயன்:

இப்படி ஒரே டைட்டிலுக்கு 2 தரப்பும் மோதிக் கொள்வது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமின்றி போஸ்டரில் ஒரு ஸ்பெல்லிங்கும், அறிக்கையில் வேறு வேறு ஸ்பெல்லிங்கும் பயன்படுத்தப்பட்டிருப்பது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் டைட்டிலுக்கு விஜய் ஆண்டனி சொந்தம் கொண்டாடுகிறாரா? அல்லது விஜய் ஆண்டனி டைட்டிலை சிவகார்த்திகேயன் கைப்பற்ற முயற்சி என்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்போம்.

Continues below advertisement
Sponsored Links by Taboola