விஜய் ஆண்டனி


இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை கொடுத்த விஜய் ஆண்டனி தற்போது முழுமூச்சாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். நான் , சலிம் , பிச்சைக்காரன் போன்ற ஒரு சில படங்கள் அவருக்கு நல்ல வெற்றியையும் கொடுத்தன. ஆனால் அவர் நடித்த மற்ற படங்கள் சமீபத்தில் வெளியாகிய ரோமியோ உட்பட பெரியளவில் கவனம் பெறவில்லை.


வித்தியாசமான டைட்டில்களை கொண்ட விஜய் ஆண்டனி படங்கள்


விஜய் ஆண்டனியின் படங்கள் என்றாலே கொஞ்சம் வித்தியாசமான டைட்டிலை நாம் எதிர்பார்க்கலாம். பிச்சைக்காரன் , சாத்தான், இந்தியா பாகிஸ்தான் , திமிரு புடிச்சவன் , கொலை , ரத்தம் , யமன் என டைட்டிலை கேட்டாலே கொஞ்சம் பயங்கரமாக தான் இருக்கும். அந்த வகையில் தற்போது விஜய் ஆண்டனி நடித்துள்ள அடுத்த படத்திம் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு 'மழை பிடிக்காத மனிதன்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.


மழை பிடிக்காத மனிதன்






கோலி சோடா , 10 என்றதுக்குள்ள உள்ளிட்ட படங்களை இயக்கிக விஜய் மில்டன் இந்த படத்தை இயக்கியுள்ளார். சரத்குமார் , சத்யராஜ் , டாலி தானஞ்சயா, மேகா ஆகாஷ் , முரளி ஷர்மா , தலைவாசல் விஜய் , சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு அகிய இரு மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. வரும் மே 29 ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.


ரோமியோ படத்தில் சர்ச்சை


ரோமியோ படம் திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து அப்படத்தை விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் இப்படத்தையும் விஜய் ஆண்டனியின் நடிப்பையும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.


இதனைத் தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் போன்றவர்களின் விமர்சனங்களை கேட்டு ரோமியோ படத்தை மக்கள் கொண்டாடாமல் விட்டுவிடாதீர்கள் குடும்பத்துடன் இப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். திரையரங்கைத் தொடர்ந்து ரோமியோ படம் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.


விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான ரோமியோ மற்றும் ரத்தம் ஆகிய இரு படங்களும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள இப்படம் அவருக்கு தேவையான வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.