Raththam Trailer: விஜய் ஆண்டனி படத்தில் உருவாகி இருக்கும் ரத்தம் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. 


சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ரத்தம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழ் படம்  மற்றும் தமிழ் படம்2 இயக்கிய அமுதன் அடுத்ததாக விஜய் ஆண்டனியை வைத்து ரத்தம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதற்கு கண்ணன் நாராயணன் இசை அமைத்துள்ளார். படத்தில் விஜய் ஆண்டனி தவிர மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  ரத்தம் படத்தை இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப், பங்கஜ் போரா, விக்ரம் குமார் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர். 


தமிழ் படத்தில் காமெடியால் ரசிகர்களை எண்டர்டெய்ன்மெண்ட் செய்த அமுதன், இந்த படத்தில் சீரியசான அரசியல் கதையை கொடுக்க உள்ளார். ரத்தம் என்ற தலைப்பு ஏற்ப படத்தின் டிரெய்லர் கொலையில் தொடங்குகிறது. பத்திரிகை அலுவலகத்தில் நடைபெறும் கொலை, அமைச்சர்கள் பதவி நீக்கம், போலீசாரின் விசாரணை, பதற்றம், சண்டை  காட்சிகளுடன், வழக்கமாக அமைதியான முகத்துடன் தனது பாணியில் பேசும் விஜய் ஆண்டனியுடன், ரத்தம் ரத்தம் என்ற பின்னணி குரல் டிரெய்லரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையே திரைப்படங்களை விமர்சிக்கும் நெட்டிசன்ஸை கலாய்க்கும் காட்சிகள் டிரெய்ட்லரில் இடம்பெற்றுள்ளன.  



இதற்கு முன்னதாக கடந்த டிசம்பரில் வெளியான டீசரில் பா. ரஞ்சித், வெங்கட்பிரபு மற்றும் வெற்றிமாறனின் பின்னணி குரல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதில் சாதாரண வாழ்க்கையை வாழும் ஒருவர் எப்படி வன்முறை பாதையை தேர்வு செய்கிறார் என்பதை டிரெய்லர் கூறியது. ஒரு கொலையால் ஊடகத்திற்கும் அரசியலுக்கும் நிகழ்வும் மோதலே ரத்தம் படத்தின் கதையாக இருக்கும் என டிரெய்லர் காட்சிகள் வெளிப்படுத்துகின்றனர். 


அண்மையில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன்2 மற்றும் கொலை படங்கள் பெரிதாக வெற்றிப்பெறாத நிலையில், இந்த படம் அவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் தருமா என்பதை வரும் 28ம் தேதி படம் ரிலீசாகும் வரை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


மேலும் படிக்க: Ethirneechal Marimuthu: காற்றில் கரைந்தார் மாரிமுத்து.. கண்ணீர் மழையில் உடல் தகனம்..


Jigarthanda DoubleX: ஜிகர்தண்டா 2 அப்டேட் கொடுத்த படக்குழு.. யானை மேல் மாஸாக அமர்ந்திருக்கும் லாரன்ஸ்..