விஜய் ஆண்டனி நடித்து கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் சக்தி திருமகன். திரையரங்கில் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது கூடிய விரைவில் படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது
சக்தி திருமகன்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் விஜய் ஆண்டனி. பிரபல இசையமைப்பாளரான இவர் நடிகராக உருவெடுத்த பிறகு தேர்வு செய்து நடிக்கும் படங்கள் மூலமாக மக்கள் மத்தியில் இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
விஜய் ஆண்டனியின் 25 ஆவது படமாக உருவாகியுள்ளது சக்தி திருமகன் . அருவி , வாழ் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய அருண் பிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து அவரே இசையமைத்தும் இருக்கிறார். முன்னதாக படத்திற்கு பராசக்தி என்று படக்குழு டைட்டில் வைத்திருந்தனர். ஆனால் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு இந்த டைட்டிலை ஏவிஎம் நிறுவனம் அனுமதி வழங்கியிருந்தது. இதனால் படத்தின் அறிவிப்பு வெளியானபோது இரு தரப்பினரிடையே உரசல் ஏற்பட்டு பின் சக்தி திருமகன் என படத்திற்கு பெயர் மாற்றப்பட்டது.
இப்படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிருபலானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரா, கிரண், ரினி, ரியா ஜித்து மற்றும் மாஸ்டர் கேசவ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். விஜய் ஆண்டனி நடித்த நான் , சலிம் , பிச்சைக்காரன் ஆகிய படங்கள் கமர்சியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றன. இந்த படங்கள் தவிர்த்து அவர் நடித்த பிற படங்கள் பெரியளவில் கவனமீர்க்கவில்லை என்றாலும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார்.அந்த வகையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான மார்கன் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று பாராட்டுக்களை அள்ளியது. தொடர்ந்து வெளியான சக்தி திருமகன் படமும் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. விறுவிறுப்பான அரசியல் களம் , சுவாரஸ்யமான திரைக்கதை என கதை நகர்வதே தெரியாமல் பார்வையாளர்களை ஒன்ற வைத்தது சக்தி திருமகன்.
ஓடிடி ரிலீஸ்
வரும் அக்டோபர் 24 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் சக்தி திருமகன் வெளியாக இருக்கிறது.