அதிசாரம் என்றால் முன்னோக்கி (or) மிக வேகமாக நகர்வது என்று பொருள்... குறிப்பாக கிரகங்களுக்கு மூன்று விதமான பயணங்கள் உண்டு அது பூமியிலிருந்து நம் பார்க்கும் பார்வையை பொறுத்தது... கிரகங்கள் சீரான வேகத்தில் அவரது நேர்கோட்டில் நகர்ந்து கொண்டு இருப்பார்கள்... பூமியிலிருந்து ஒரு கிரகம் எப்படி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை வைத்துத்தான் தற்பொழுது நான் கிரகங்களின் நகர்வை பற்றி சிறிதாக சொல்கிறேன்... 

Continues below advertisement

குரு தற்பொழுது மிதுன ராசியில் பயணித்துக் கொண்டிருக்கிறார்... அது சீரான பயணம்... ஆனால் அந்த குருவே சூரியனுக்கு ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரும் பொழுது பின்னோக்கி பயணிப்பது போல் தெரியும்...அதை நாம் ’வக்கிரம்’ என்று கூறுகிறோம்... இதே போல தான் குரு மிக வேகமாக முன்னோக்கி நகர்ந்து... மிதுன ராசியில் தென்படும் குருபகவான் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி கடக ராசிக்கு செல்வது போல தெரியப்போகிறது... உண்மையிலேயே அவர் கடக ராசியில் தான் பிரவேசிக்கப் போகிறார்... இப்படி உச்சம் என்ற நிலைக்கு குருபகவான் போகும்பொழுது உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுப்பார் என்ற உண்மையான விவரங்களை தற்போது தெரிந்து கொள்வோம்...

அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய குரு பெயர்ச்சி தான் நான்கு சிறந்த ராசிகளில் ஒன்றாக வருகிறது காரணம் ஏழாம் இடத்தில் குரு உச்சம் பெறுகிறார் மகரத்திற்கு குரு பனிரெண்டாம் அதிபதி ஆனாலும் கூட அவர் உச்சம் பெற்று உங்கள் ராசியை பார்ப்பது மிகச் சிறப்பான பலன்களை கொண்டு வரும்... இவ்வளவு நாட்கள் நீங்கள் யார் என்றே தெரியாமல் இருந்தாலும் கூட குரு உச்ச பெரும் காலத்தில் அனைவருக்கும் தெரிந்த நபராக நீங்கள் மாறுவீர்கள்... பொது ஜன தொடர்பு ஏற்படும் அதாவது நீங்கள் வீட்டிலேயே அமர்ந்திருந்தால் கூட நான்கு பேருக்கு தெரியும் வகையில் உங்களுடைய அமைப்பு இருக்கும்... பொது மக்களோடு கலந்து பேசி உரையாடி மகிழ்ந்து நல்ல பெயர் எடுத்து நல்ல வியாபாரம் முன்னேற்றத்தோடு அதிசார குரு பெயர்ச்சி நன்மைகளைப் பெறப் போகிறீர்கள்....

Continues below advertisement

 திருமணத்திற்காக காத்திருக்கின்ற மகர ராசி அன்பர்களே இதோ வரன்கள் பார்த்து நிச்சயம் செய்வதற்கான காலகட்டம்... திருமணத்தை ஏப்ரல் மே போல வைத்துக் கொள்ளுங்கள் நன்றாக அமையும்.... குறிப்பாக ஏழாம் வீட்டில் இருந்து அவர் உங்கள் ராசியை பார்ப்பதால் அவதூறாக பேசியவர்கள் கூட உங்களை புகழப் போகிறார்கள்... பணம் விரயமானது என்று கவலைப்பட்டீர்கள் அல்லவா தற்பொழுது வங்கி கணக்கில் சேமிப்பு உயர போகிறது பொருளாதாரம் முன்னேற்றம் அதிகமாக இருக்கப் போகிறது.... குருவினுடைய ஆதிக்கம் உங்களுடைய ராசிக்கு அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி நல்ல விளைவுகளை கொண்டு வரும்.... வீடு வாங்க விற்க மாற சிறந்த நேரம் தான் இது... தொழில் ரீதியான நல்ல முன்னேற்றத்தையும் வியாபார விரிவுபடுத்துவதிலும் நல்ல பலன் காண்பீர்கள்...

 குரு உங்கள் ராசிக்கு 11 ஆம் வீட்டை பார்ப்பதால் பணம் எங்கே இருந்து வருகிறது என தெரியாமல் அதிகப்படியான பணத்தால் திக்கு முக்காட வாய்ப்பு உண்டு.... நான் கூறுவது ஏதோ மேஜிக் போல இருக்கலாம் ஆனால் குரு குரு உச்சம் பெற்று ராசியின் 11 ஆம் பேட்டை பார்த்து விட்டால் போதும் கடல்கள் தீர்ந்துவிடும் சேமிப்பு உயரும் நான்கு பேருக்கு நீங்கள் பணம் எடுத்துக் கொடுக்கின்ற அளவுக்கு உங்கள் கையில் பணம் புரளும்...

 லாட்டரி சீட்டு கேரளாவுக்கு சென்று வாங்கி வந்து இது அடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா மகர ராசி அன்பர்களே சிறிய தொகை எனும் தட்டி செல்ல வாய்ப்புண்டு.... பதினோராம் வீட்டை குரு ஏழாம் வீட்டில் இருந்து உச்சம் பெற்று பார்ப்பதால் முதல் திருமணம் நீதிமன்றம் வரை சென்று விவாகரத்தாகி இரண்டாம் திருமணம் செய்தவர்களுக்கோ அல்லது செய்ய காத்திருப்பவர்களுக்கோ இது ஒரு ஜாக்பாட் டைம் தான்....

 சுபகாரியங்கள் வீட்டில் நடைபெறும் பிள்ளைகளின் படிப்பு அந்தஸ்து உயரும்... புதிய வியாபாரத்தை முன்னெடுத்து அதன் மூலம் வெற்றி காண்பீர்கள் பொருளாதார வளர்ச்சியும் அதன் மூலம் ஏற்படும்...