விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாட்டு பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்து வருகிறது. யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த இந்தப்பாடலுக்கு பலரும் நடனமாடி தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.


இந்த நிலையில், பீஸ்ட் படத்திற்கு இசையமைத்த அனிருத், அண்மையில் துபாயில் இசைக்கச்சேரி நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் அவரும், பாடகி ஜோனிடா காந்தியும் இணைந்து, அரபிக்குத்து பாடலை பாடினர். அப்போது மேடைக்கு வந்த அனிருத்தின் தந்தையான ரவி ராகவேந்திரா அரபிக்குத்து பாடலுக்கு ஆட, அவருடன் அனிருத்தும் ஆடினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 






நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாகியுள்ள இந்தப்படத்தின் பின்னணி வேலைகள் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறன. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் முன்னதாக தொடங்கிய நிலையில் அண்மையில் படத்திலிருந்து, ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக்கல் வீடியோவாக, அரபிக்குத்து பாடல் வெளியிடப்பட்டது.


 






வெளியான 10 மணி நேரத்திலேயே 16 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய இந்தப்பாடல், ஒரே நாளில் அதிகபார்வையாளர்களை கடந்த லிரிக்கல் வீடியோ என்ற சாதனையையும் படைத்தது.