தென்னிந்திய சினிமாவின் மாஸ் ஹீரோ இளைய தளபதி விஜய் மற்றும் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லீ இருவரின் ஜோடியில் இதுவரையில் வெளியான தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்கள். இந்த வெற்றி கூட்டணி மீண்டும் தமிழ் - தெலுங்கு என பைலிங்குகள் திரைப்படம் ஒன்றில் கூட்டணி சேர முடிவெடுத்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மெகா பட்ஜெட் திட்டத்தை யார் தயாரிக்கிறார்கள் :
ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றி நடைபோட்ட அல்லு அர்ஜுனின் 'புஷ்பா: தி ரைஸ்' படத்தை தயாரித்த தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி நிறுவனம் தான் அட்லீ - விஜய் இணைய இருக்கும் மெகா திட்டத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்காவது முறையாக இந்த ஜோடி மீண்டும் இணையும் இப்படம் விஜய் 68 படமாக இருக்கும். இப்படம் குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இருவரும் சந்தித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் இதுவரையில் வெளியாகவில்லை.
இருவருமே பிஸி :
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி பைடிப்பள்ளியுடன் "வாரிசு " திரைப்படத்தின் பணிகளில் ஈடுபட்டுள்ளார். மிகவும் மும்மரமாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. அதே சமயம் இயக்குனர் அட்லீ பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் "ஜவான்" திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இருவரும் அவரவர் படங்களில் பிஸியாக இருந்து வருகின்றனர். எனவே விஜய் 68 குறித்த அப்டேட் இதுவரையில் உறுதியாக வெளியாகவில்லை.
5 ஆண்டுகளாக மெர்சல் :
சமீபத்தில் தான் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தின் 5 ஆண்டுகள் நிறைவு தினம் கொண்டாடப்பட்டது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அனைவரும் ஹேஷ்டேக்குகள் மூலம் சோசியல் மீடியாவை கலக்கி வந்தார்கள். ஆறே ஆண்டுகளில் மூன்று வெற்றிப்படங்களை தொடந்து கொடுத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது இந்த வெற்றி கூட்டணி.