தமிழ் இயக்குநர் லிங்குசாமி தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் தி வாரியர் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். தமிழ் -  தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் அந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நேற்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து இயக்குனர் லிங்குசாமி கொடுத்த பேட்டியில் ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.


அஞ்சானில் என்ன பிரச்சினை?


வரிசையா எல்லா படங்களும் ஹிட், அஞ்சான்ல மட்டும் என்ன நடந்தது என்று கேட்டபோது, "அந்த படம் கேரளாவுல மிகப்பெரிய ஹிட், ஹிந்தில ஹிட். இங்க ஏதோ ஒன்னு இல்லாம போயிருக்கு, நான் ஏதோ ஒரு தப்பு பண்ணிருக்கலாம், ஸ்க்ரீன்பிளேலயோ எதுலயோ தப்பு நடந்திருக்கலாம். முதல் முதல்ல பேமிலி டச்சே இல்லாத என் படமா இருந்தது ஒரு காரணமா கூட இருக்கலாம். இன்னொன்னு படம் பன்னது ரொம்ப சிறிய இடைவெளில பண்ணோம். எடிட்டிங்கு நேரம் ரொம்ப கம்மியா இருந்தது. ஆனா நான் ஒன்னும் விளையாட்டா பண்ணிடல, ரொம்ப விரும்பி ரசிச்சுதான் பண்ணினேன்." என்று கூறினார். 



எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை


மேலும், "ஆனா எப்படியோ அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகல. இப்போ எனக்கு மட்டுமே இது புதுசா நிகழ்ந்திருந்தா குறையா சொல்லலாம். ஆனா உலகத்துல இருக்குற எத்தனையோ இயக்குனர்களுக்கு இது நடந்திருக்கு. அந்த படத்தை இன்னைக்கு டிவில பாத்துட்டு என்ன ஸ்டைலிஷா பண்ணிருக்கிங்க சார்ன்னு சொல்றாங்க. தியேட்டர்ல வரும்போது அது ஒரு எதிர்பார்போட வருது. அதை அது நிறைவு செய்யணும், அதோட கனெக்ட் ஆகணும், அந்த இடத்துல தோத்திருக்கலாம்." என்றார்.


தொடர்புடைய செயதிகள்: Rasi Palan Today, 15 July 2022 : கன்னிக்கு நிம்மதி...! விருச்சிகத்துக்கு அலைச்சல்..! அப்போ உங்க ராசிக்கு எப்படி..?


வாரியர் திரைப்படம்


வாரியர் திரைப்படம் குறித்து பேசுகையில், "நான் 10 படம் பன்னதுக்கு அப்புறம் தெரிஞ்சுக்குறேன், எனக்கு கதை பண்ணவே தெரியாதுன்னு. நான் இவ்வளவு நாள் கதை சொல்ற மாதிரி ஏமாத்திருக்கேன். கதையே கிடையாது என்கிட்ட, நான் முதல் முதலில் கதை இருக்குன்னு நம்புற படம் வாரியர்." என்று கூறினார்.



அல்லு அர்ஜுன் படம்


அல்லு அர்ஜுன் உடன் நடந்த படம் என்னானது என்று கேட்டபோது, "அல்லு அர்ஜுன் படத்துக்கு பூஜை வரைக்கும் போட்டோம், ஆனா ஏதோ காரணங்களால நின்னு போச்சு. ஆனா இப்போ கூட ஒரு மீட்டிங் நடந்திருக்கு. சீக்கிரம் பண்ணுவோம். இந்த படம் வந்துடுச்சுன்னா அடுத்து எல்லா ஹீரோவோடையும் படம் பண்ணுவோம்." என்றார். 


விஜய் குறித்து


தெலுங்குல ஏன் படம் பண்றீங்க என்ற கேள்விக்கு, "இப்போ ஃபகத் ஃபாசில பாம்பேல பாக்குறாங்க. ஓடிடியையும் மனசுல வச்சுக்கிட்டுதான் படம் பண்றாங்க. ஆனா அதுக்காக பேன் இந்தியா படம்ன்னு எல்லா மொழிக்கும் ஒரு ஆள புடிச்சு போட்டோம்ன்னா அதுவே தோல்விக்கு காரணமா ஆகிடுது. கண்டெண்ட்தான் இப்ப ஒரே பேன் இந்தியா ஹீரோ. எதுக்காகவும் சமரசம் செய்யாம கதை எழுதிட்டா எதை எந்த மூலைல இருந்து கூட பாத்துருவாங்க. இப்போ விஜய் கூடத்தான் தெலுங்குல படம் பன்றாரு." என்று பதிலளித்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.