தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். அவரை இந்த சிம்மாசனத்தை எட்ட கடுமையான போராட்டங்கள், அவமானங்களை எதிர்த்து விடாமுயற்சியுடன் போராடி அடைந்துள்ளார். அவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கிலும் கோடான கோடி ரசிகர்கள் உள்ளனர். குட்டி பாப்பா முதல் வயசான தாத்தா பாட்டி வரை அனைத்து ஏஜ் குரூப்பிலும் ரசிகர்களை கொண்ட ஒரு நடிகர் என பெருமையை பெற்றவர் நடிகர் விஜய்.


வரும் ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜய் 50வது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு அவரின் நடிப்பில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த ஆறு படங்களை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் இது திட்டமிடப்பட்டுள்ளது.  


இதுவரையில் இல்லாத அளவுக்கு ரீ ரிலீஸ் படங்கள் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. ஏற்கெனவே ஏப்ரல் மாதம் வெளியான விஜயின் 'கில்லி' திரைப்படம் இதுவரை எந்த ரீ ரிலீஸ் படங்களும் செய்யாத அளவுக்கு வசூலில் சாதனை படைத்தது வருகிறது. இன்றும் 2கே கிட்ஸ்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியுள்ளது. அந்த வகையில் அடுத்தடுத்து விஜய்யின் வெற்றி படங்களை அவரது 50ஆவது பிறந்தநாள் ஸ்பெஷல்லாக ரீ ரிலீஸ் செய்துள்ளனர்.


 



 


துப்பாக்கி :


கடந்த 2012ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், ஜெயராம் நடிப்பில் வெளியான 'துப்பாக்கி' திரைப்படம் வெளியான பிறகு தான் மக்கள் மத்தியில் ஸ்லீப்பர் செல் என்ற வார்த்தையே பிரபலமானது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்.  ஜூன் 21ஆம் தேதியான இன்று  இப்படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. 


'ஐம் வெயிட்டிங்' என துப்பாக்கி படத்திற்காக காத்திருந்த ரசிகர்கள் படம் வெளியாக உள்ளது என தெரிந்ததும் அட்வான்ஸ் புக்கிங் செய்து ஹவுஸ்புல் காட்சிகளாக தூள் கிளப்பியுள்ளார். துப்பாக்கி ரீ-ரிலீஸ் திரைப்படம் நேற்று ஒரே நாளில் இது வரையில் 32 லட்சம் வரை வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 




அழகிய தமிழ்மகன் :


பரதன் இயக்கத்தில் ஸ்ரேயா, நமீதா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படத்தின் விஜய் இரட்டைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். மாறுபட்ட கதாபாத்திரத்தில் விஜய் நடித்த இப்படம் வெற்றிப் படமாக அமைந்தது. கடந்த மார்ச் 22ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 


 



மாஸ்டர் :


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் லண்டன் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஜூன் 22ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டிலும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. கொரோனா காலகட்டத்தில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் என்ஜாய் செய்ய முடியாமல் போனது. தற்போது அந்த ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 


 




கத்தி :


2014ஆம் ஆண்டு  ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் வெளியான இந்த மாஸான திரைப்படம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 



மெர்சல் :    


அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்க அவருக்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா மற்றும் காஜல் அகர்வால் நடித்திருந்தனர். கலக்கலான வெற்றியைப் பெற்ற இப்படம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 


 



போக்கிரி :


2007ஆம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் நடிகர் விஜய், அசின், நாசர், பிரகாஷ்ராஜ், நெப்போலியன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான போக்கிரி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. போக்கிரி திரைப்படம் 28 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இந்த படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் அடுத்தாண்டுடன் சினிமாவில் இருந்து விலகவுள்ள நிலையில் அவரது படங்கள் ரீ-ரிலீஸிலும் நல்ல வசூலைப் பார்ப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.