Nayanthara Vignesh Shivan : ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே.. இதுதான் ஸ்பெஷல்.. கிளிக்ஸை வெளியிட்ட விக்கி..

நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப்படத்துக்கு முன்னோட்டமாக விக்னேஷ் சிவன் நயன்தாரா உடனான காதல் ததும்பும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

Continues below advertisement

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் கதை குறித்த ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக விக்னேஷ் சிவன் நயன் உடனான காதல் ததும்பும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

Continues below advertisement

’நானும் ரவுடி தான்’ படத்தில் தொடங்கி நீண்ட ஆண்டுகளாகக் காதலித்து வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.



மகாபலிபுரத்தில் அமைந்திருக்கும் ரிசார்ட்டில் அமைக்கப்பட்ட கண்ணாடி மண்டபத்தில் நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன். திருமணம் நடந்த இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில், திருமணம் முடிந்து விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி தங்கள் ஹனிமூன் படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்ததை அடுத்து, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இந்த ஜோடிக்கு நோட்டிஸ் அனுப்பியதாகவும், திருமண வீடியோவை ஒளிபரப்ப மறுப்பு தெரிவித்ததாகவும் முன்னதாகத் தகவல்கள் வந்தன.

 

இந்நிலையில், முன்னதாக இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நயன்தாரா விக்னேஷ் சிவன் குறித்த ஆவணப்படம் கூடிய விரைவில் நெட் ஃப்ளிக்ஸ் தளத்தில் ஒளிப்பரப்பாகவுள்ளதாகவும், விரைவில் ரசிகர்கள் இதை கண்டுக்களிக்கலாம் எனவும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

 

இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் தளத்துடன் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் தங்கள் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களை விரைவில் காணலாம் என்றும் கூறி விக்னேஷ் சிவன் போட்டோ பகிர்ந்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola