✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள
  • முகப்பு
  • பொழுதுபோக்கு
  • LIC Movie Update: எல்.ஐ.சி படத்தின் புது டைட்டில் அப்டேட்! பிரதீப் ரங்கநாதன் பர்த்டே ஸ்பெஷலாக வெளியாகுதா?

LIC Movie Update: எல்.ஐ.சி படத்தின் புது டைட்டில் அப்டேட்! பிரதீப் ரங்கநாதன் பர்த்டே ஸ்பெஷலாக வெளியாகுதா?

Advertisement
லாவண்யா யுவராஜ் Updated at: 23 Jul 2024 04:26 PM (IST)

LIC new title update: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் - கீர்த்தி ஷெட்டி நடிக்கும் படத்தின் புதிய டைட்டிலை படக்குழு நாளை மறுநாள் வெளியிடவுள்ளது.

எல்.ஐ.சி புது டைட்டில்

NEXT PREV



 

தமிழ் சினிமாவின் இன்றைய தலைமுறையினரின் ஃபேவரட் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். சிம்பு - வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான 'போடா போடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.  அவர் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடி தான், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் நல்ல பிரபலத்தை தேடி தந்தது. அதற்கு பிறகு ஒரு சிறிய பிரேக் எடுத்து கொண்ட விக்னேஷ் சிவன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

 

 


 

'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்ற பிறகு 'லவ் டுடே' படத்தை இயக்கி ஹீரோவாக நடித்தியர்ந்தார்  பிரதீப் ரங்கநாதன். அப்படத்தை இன்றைய தலைமுறையினர் கொண்டாடி தீர்த்தனர். இயக்குநராக மட்டுமின்றி ஒரு யதார்த்தமான நடிகனாகவும் கலக்கிய பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தின் ஹீரோவாகி உள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் கீழ் லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு எல்.ஐ.சி (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என பெயரிடப்பட்டது. எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். 

 

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு மிகவும் மும்மரமாக கோவை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் படத்தின் தலைப்பு சர்ச்சையில் சிக்கியது. எல்.ஐ.சி - காப்பீடு நிறுவனத்தின் பெயரை படத்திற்கு வைக்க கூடாது. அது வணிக நிறுவனத்தின் குறியீடு. அதை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் மற்றும் அது மக்களுக்கு நிறுவனம் மீது இருக்கும் நன்மதிப்பை குறைத்து விடும் என அந்த நிறுவனம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் படத்தின் தலைப்பை மாற்றி வைக்குமாறு படக்குழுவினருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

 

இது ஒரு பக்கம் இருக்க இயக்குநர் எஸ்.எஸ். குமரன் எல்.ஐ.சி தலைப்பு தன்னிடம் இருப்பதாகவும் அதை இனியும் விக்னேஷ் சிவன் பயன்படுத்தினால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

 



 

இந்நிலையில் தற்போது படக்குழு படத்தின் தலைப்பை மாற்றியமைக்க முடிவெடுத்துள்ளது. எல்.ஐ.சி படத்தின் புதிய டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. வரும் ஜூலை 25ம் தேதி பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாளை முன்னிட்டு இரவு 12 மணிக்கு படத்தின் டைட்டிலை தெரிவிக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 



Published at: 23 Jul 2024 04:26 PM (IST)
Tags: Vignesh Shivan first look poster keerthi shetty Pradeep Ranganathan Anirudh LIC movie LIC new title
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.