லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம் கூழாங்கல். இந்த படத்தை  பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ளார். படம்  முழுக்க முழுக்க புதுமுக நடிகர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு  பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. ஏற்கனவே கூழாங்கல் திரைப்படம் ஏகப்பட்ட டைகர் விருது உள்ளிட்ட பல  விருதுகளை பெற்ற நிலையில் தற்போது ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 


படத்தின் கதை மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக விக்னேஷ் சிவன் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு தொடர்ந்து விண்ணப்பித்து வருகிறார். இந்நிலையில் இந்திய திரைப்பட சங்கத்தை சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர், கூழாங்கல் திரைப்படத்தை ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்துள்ளனர்.  முன்னதாக யோகி பாபுவின் மண்டேலா திரைப்படம் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்திருந்தது. தற்போது இது குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் இயக்குநர் சேரன், நடிகை ராதிகா உள்ளிட்ட பலரும் விக்னேஷ் சிவன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






 


 


சேரன்  வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ ஆஸ்கார் போட்டிக்கான இந்திய படங்களின் வரிசையில் இந்திய தேர்வு கமிட்டியில் இருந்து பரிந்துரைக்கப்பட்டிருக்கும் "கூழாங்கல்" திரைப்படத்தை தயாரித்த, இயக்கிய, பணிபுரிந்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..  வெற்றிவாகைசூடுங்கள்.” என குறிப்பிட்டுள்ளார். அதே போல நடிகை ராதிகா சரத்குமார் “ உங்களுக்கான வெற்றியை அடைய இன்னும் சில படிகள்தான் உள்ளன விக்னேஷ் சிவன் மற்றும் ரவுடி பிக்சர்ஸ். நீங்கள் மேலும் வலுவடைய வாழ்த்துக்கள் “ என குறிப்பிட்டுள்ளார்.















அதே போல நடிகை குஷ்பு “ விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவிற்கு வாழ்த்துக்கள், இயக்குநர் மற்றும் அவரது குழுவினரை பாராட்டியே ஆகவேண்டும். தமிழ் சினிமாவிற்கு பெருமை சேருங்கள் “ என குறிப்பிட்டுள்ளார். இவர்களை தவிர இயக்குரர் மாரி செல்வராஜ், கார்த்திக் சுப்புராஜ் , சீனு ராமசாமி உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.