பிரபல MOLODIST சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கம் மற்றும் எழுத்தில் உருவான கூழாங்கல் என்ற படம். முழுக்க முழுக்க புதுமுக நடிகர்களை கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. இயக்குநரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிம்பு மற்றும் வரலட்சுமி நடிப்பில் உருவான போடா போடி என்ற படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 






கே.ஆர் செந்தில் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியான சிவி என்ற படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக முதலில் களமிறங்கினர் விக்னேஷ் சிவன். அதன் பிறகு தான் 2012ம் ஆண்டில் வெளியான போடா போடி படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து பிரபல நடிகர் விஜய்சேதுபதி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகிய நானும் ரவுடி தான் என்ற படத்தை இயக்கினர். இந்த படத்திற்கு பிறகே நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலர்களாக மாறினார்கள் என்றால் அதுமிகையல்ல.  


Thalapathy 66 Update | ரசிகர்களை குஷிப்படுத்திய இயக்குநர் : வெளியானது தளபதி 66 அப்டேட்?   






நயன்தாரா நடிப்பில் வெளிய இருக்கும் நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வலம்வரும் விக்னேஷ் ஒரு சிறந்த பாடலாசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. போடா போடி படத்தில் தொடங்கிய அவரது பாடலாசிரியர் பயணம் இன்று வரை தொடர்கின்றது. என்னை அறிந்தால் படத்தில் புகழ் பெற்ற 'அத்தாரு அத்தாரு', மாரி படத்தில் 'தப்பா தான் தெரியும்', விக்ரம் வேதா படத்தில் 'கருப்பு வெள்ளை', ரெமோ படத்தில் வரும் நான்கு பாடல்கள் என்று இதுவறை 40க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அச்சம் என்பது மடமையடா படத்தில் வரும் ஷோக்களி மற்றும் அண்மையில் வெளியான மாஸ்டர் படத்தில் வரும் 'அந்த கண்ண பாத்தாக்க' மற்றும் 'Quit பண்ணுடா' ஆகிய பாடல்கள் விக்னேஷ் வரிகளில் பிறந்தவையே. 





இந்நிலையில் கூழாங்கல் என்ற அவரது திரைப்படம் தற்போது பன்னாட்டு திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாக தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார். படத்தின் இயக்குநர் பி.எஸ்,வினோத் ராஜ் இவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. கிராம பின்னணியில் உருவாகி உள்ள இந்த கதைக்களத்திற்கு ஏற்றார் போல ரம்யமான இசையை கொடுத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.