பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்துவரும் நிலையில். தற்போது தளபதி 66 குறித்த சுவாரசிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தளபதி விஜயின் 64-வது படமாக வெளியான மாஸ்டர் திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி வெளியானது ஆனால் அதற்கு முன்னதாகவே தளபதி 65 படம் குறித்த அப்டேட் வெளியானது குறிப்பிடத்தக்கது. தமிழக தேர்தல் முடிந்த அடுத்த நாளே படப்பிடிப்பு பணிகளுக்காக நடிகர் விஜய் மற்றும் தளபதி 65 படக்குழு ஜார்ஜியா புறப்பட்டனர்.
படக்குழு ஜார்ஜியாவில் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்து நாடு திரும்பியது. இந்நிலையில் அவர்கள் அடுத்த கட்டப் படப்பிடிப்பை சென்னையில் தொடங்க தயாராகி வருகின்றனர். சமீபத்திய அறிக்கையின்படி, அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிக்காக சென்னையில் ஒரு பெரிய ஷாப்பிங் மால் செட் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில், மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் மால்கள் மூடப்பட்டுள்ளன. எனவே 'தளபதி 65' படத்தின் சில முக்கிய காட்சிகளை படமாக்க ஒரு வணிக வளாகத்தை செட்டாக அமைத்துள்ளனர்.
மேலும், ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வருவதால் தொற்று பரவும் அச்சம் ஏற்படும் என்பதால் படப்பிடிப்பு நடைபெறும் இடம் குறித்த தகவலை வெளியிடவில்லை. இந்த படம் அதிரடி, காதல் மற்றும் நகைச்சுவை நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே விஜய்யுடன் ஜோடியாக நடிக்கிறார், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளார் பூஜா. யோகி பாபு, அபர்ணா தாஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
FIR Movie | OTT-இல் வெளியாகிறதா FIR? விஷ்ணு விஷால் விளக்கம்
இந்நிலையில் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் வம்சி பைடிபள்ளியின் அடுத்த படத்தில் பணியாற்ற நடிகர் விஜய் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. வம்சி பைடிபள்ளியின் அடுத்த படம் இருமொழிப்படமாக இருக்கும் என்ற தகவலும் இணையத்தில் வலம்வருகின்றது. தளபதி 66-ஆக உருவாகவுள்ள இந்த படத்தில் ராஜு தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வம்சி பைடிபள்ளி தெலுங்கு திரையுலகில் பிரபலமான இயக்குநர். ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், மகேஷ் பாபு பல முன்னணி நடிகர்களை வைத்து இவர் படங்களை இயக்கியுள்ளார். பிரபாஸ் நடிப்பில் 2007-ஆம் ஆண்டு வெளியான முன்னா என்ற படத்தின் மூலம் இவர் தெலுங்கு திரையுலகில் இயக்குநராக களமிறங்கினர்.