7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரித்து விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் எல்.ஐ.கே. பிரதீப் ரங்கநாதன் , கெளரி கிஷன் , க்ரித்தி ஷெட்டி , எஸ்.ஜே சூர்யா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள் அனிருத் இசையமைத்துள்ளார். சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள எல்.ஐ.கே படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
கவனமீர்க்கும் எல்.ஐ.கே டீசர்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன் படத்தை அறிவித்தார். இந்த டைட்டில் சர்ச்சையை ஏற்படுத்தவே லவ் இன்சூரன்ஸ் கம்பேனி என மாற்றப்பட்டது. 2023 ஆம் ஆண்டு தொடங்கிய படப்பிப்பு நீண்டுகொண்டே சென்றதால் இந்த படம் கைவிடப்பட்டதாகவும், தயாரிப்பாளரின் பணத்தை விக்னேஷ் சிவன் வீணடிப்பதாகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக தற்போது செமையான ஒரு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சைன்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ரொமான்ஸை இணைத்து புதுமையான ஒரு கதையாக எல்.ஐ.கே உருவாகியுள்ளது. 2040 ஆம் ஆண்டில் டெக்னாலஜி அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் சூழலில் ஒரு பெண்ணை பார்த்த உடனே காதலில் விழுகிறார் நாயகன். காதர்களை சேர விடாமல் தனது டேட்டிங் செயலியால் மக்களை கட்டுப்படுத்துகிறார் வில்லன் எஸ்.ஜே.சூர்யா. சைன்ஸ் ஃபிக்ஷன் படங்களைப் பொறுத்தவரை ஐடியாவாக நிறைய யோசிக்கலாம் என்றால் ஒரு ஃப்யூச்சரிஸ்டிக் படத்தை எடுப்பது என்பது சாதாரணமானது இல்லை . அந்த வகையில் இந்த டீசரில் காட்டப்பட்டிருக்கும் கதையுலகம் நம்பகத் தன்மையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படியான கதை உலகத்தை உருவாக்க தேவையான நேரத்தை படக்குழு எடுத்துக் கொண்டிருக்கிறது.
மழைக்கு பயண்படுத்து குடை , பின்னணியில் வரும் ரஜினி ரெஃபரன்ஸ் என சின்ன சின்ன விஷயங்களை பார்த்து பார்த்து உருவாக்கி இருக்கிறார்கள். ஓளிப்பதிவாளர் ரவிவர்மனின் பணி இப்படத்திற்கு புதுமையான அனுபவத்தை சேர்க்கும் என எதிர்பார்க்கலாம்