நடிகர் வித்யுத் ஜம்வால் நடித்துள்ள ஸ்ட்ரீட் ஃபைட்டர் படத்தின் டீசன் அண்மையில் வெளியாகி பெரியளவில் கவனமீர்த்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். களரிபயட்டு பயிற்சியின் ஒரு பகுதியாக கொதிக்கும் மெழுகை அவர் தனது முகத்தில் ஊற்றிய இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது .

Continues below advertisement

விஜயின் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே கவனமீர்த்தவர் இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால். அஜித்தின் பில்லா 2 , சிவகார்த்திகேயனின் மதராஸி ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார். நடிப்பு தவிர்த்து தற்காப்பு கலையில் பயிற்சி பெற்றுள்ளார். கேரளத்தின் பாரம்பரிய தற்காப்பு கலையான களரிபயட்டு கலையில் தேர்ந்தவர். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆசாதாரணமான விஷயங்களை செய்து வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்புவார். ஒருமுறை கடும் குளிரில் நிர்வாணமாக புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது இதே போல் கொதிக்கும் மெழுகை முகத்தில் ஊற்றி வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்

Continues below advertisement

கொதிக்கும் மெழுகை முகத்தில் ஊற்றிய வித்யுத் ஜம்வால்

களரிபயட்டு பயிற்சியில் ஒரு பகுதியாக எரியும் மெழுகுவர்த்தியில் உருகிய கொதிக்கும் மெழுகை வித்யுத் தனது முகத்தில் ஊற்றுகிறார். "நம்முடைய எல்லைகளை கடந்து நமக்குள் இருக்கும் போர்வீரனை விளிக்க செய்யும் களரிபயட்டு மற்றும் யோகாவை போற்றும் விதமாக இதனை செய்ததாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்