சிவகார்த்திகேயன்


கடந்த ஆண்டு மாவீரன் இந்த ஆண்டு அயலான் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.ஒருபக்கம் நடிப்பு இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் என சினிமாவில் தொடர் வெற்றிகளை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் தனது மூன்றாவது குழந்தை பிறந்த மகிழ்ச்சிகரமான தகவலை தன் ரசிகள்க்ளுடன் பகிர்ந்து கொண்டார் அமரன் படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு முருகாதாஸ் இயக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.

Continues below advertisement


எஸ் கே 23


ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் எஸ் கே 23. ருக்மினி வசந்த் இப்படத்தில் நாயகியாக நடிக்கும் நிலையில் மலையாள நடிகர் பிஜூ மேனன், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சுதீப் எளமன் இப்படத்திற்கு ஒளிப்பதிவும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்கள். ஸ்ரீ லக்‌ஷ்மி மூவீஸ் இப்படத்தை தயாரிக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் இப்படத்தின் பூஜை தொடங்கி அறிவிப்பு வெளியானது






எஸ் கே 23 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி நடிகர் வித்யுத் ஜம்வால் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். துப்பாக்கி படத்தில் சைலண்டாக இருந்து மிரட்டிய வித்யுத் ஜம்வால் தற்போது மீண்டும் முருகதாஸ் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார்.


 


அமரன்


ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இப்படத்திறகு இசையமைத்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது