தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சூரியை, விஜய் சேதுபதியை வைத்து “விடுதலை” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கும் நிலையில் முதல் முறையாக  வெற்றிமாறன் - இளையராஜா கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில் 4வது கட்ட படப்பிடிப்பு திண்டுக்கலில் உள்ள சிறுமலையில் நடைபெற்றது.

Continues below advertisement






இப்படத்தில் நடிகர் சூரி போலீஸ் வேடத்தில் நடிக்க,விஜய் சேதுபதி போராளியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளளார்.


அதுமட்டுமல்லாமல் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் இணைந்துள்ளார். இதனிடையே சில தினங்களுக்கு முன் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியதாக தெரிவித்திருந்தது. மேலும் இயக்குநர் வெற்றிமாறன் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை படம்  விடுதலை படம் 2 பாகங்களாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் விடுதலை திரைப்படத்தின் கொடைக்கானலில் எடுக்கப்பட வேண்டிய சூட்டிங் காட்சிகள் முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.






பயங்கர ஆக்சன் காட்சிகள் மற்றும் மாபெரும் ரயில் விபத்து காட்சிகள் இந்த படப்பிடிப்பில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் காட்சிகளையும் விபத்து காட்சிகளையும் பீட்டர் ஹைன் கொரியோகிராப் செய்துள்ளார். 






மேலும் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.