எழுத்தாளர் ஜெயமோகனின் "துணைவன்" நாவலின் அடிப்படையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் "விடுதலை". இப்படத்தின் முக்கிய கதாபத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி, கௌதம் மேனன் மற்றும் சூரி நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்ற அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். 



 


எப்போது ரிலீஸ் :


ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள திரைப்படம் "விடுதலை". வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படத்தினை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுயள்ளது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம். இதன் அதிகாரபூர்வமான தகவலும் வெளியிடப்பட்டது. படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்ற தகவல் ஏற்கனவே இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்தநாள் அன்று வெளியானது. 


சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி :


லீட் ரோலில் நடிக்கும் விஜய் சேதுபதி ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். முதலில் சிறப்பு தோற்றமாக மட்டுமே இருக்கும் என கூறப்பட்ட நிலையில் பிறகு முழு நீளமாக அந்த தோற்றத்திலேயே நடிப்பார் என கூறப்பட்டது. அது தான் படத்தின் ஷூட்டிங் முடிவடைய காலதாமதமானதாக கூறப்படுகிறது.






 


சண்டை காட்சிகளுக்கு பீட்டர் ஹெய்ன் :


விடுதலை படத்தின் முக்கியமான சண்டை காட்சிகள் கொடைக்கானலில் நடைபெற்று வந்தது. இப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை ஒருங்கிணைத்துள்ளார் கோரியோகிராஃபர் பீட்டர் ஹெய்ன். இவர் இந்திய சினிமாவின் அதிரடி கோரியோகிராஃபர். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பணியாற்றிவருகிறார். 


 






விடுதலை படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.