விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் த்ரிஷா , அர்ஜூன் , ரெஜினா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் நேற்று வெளியாது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் பணி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. விடாமுயற்சி படத்திற்கு முன்பே பல குறிப்பிடத் தகுந்த படங்களில் பணியாற்றியுள்ளார். இந்த படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்
வாகை சூட வா
இயக்குநர் சற்குனம் இயக்கிய களவானி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். தொடர்ந்து விமல் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான வாகை சூட வா படத்திற்கும் இவர் ஒளிப்பதிவு செய்தார். பீரியட் டிராமாவாக உருவான இப்படத்தில் இவரது ஒளிப்பதிவு தனித்துவமாக கவனிக்கப்பட்டது .
தனுஷ் படங்களில் ஓம் பிரகாஷ்
தனுஷ் நடித்த பல்வேறு படங்களுக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.வி.ஆனந்த் இயக்கிய அனேகன் , பாலாஜி மோகன் இயக்கிய மாரி 1 மற்றும் 2, பட்டாஸ், நானே வருவேன், திருச்சிற்றம்பலம் , ராயன் என வெவ்வேறு ஜானர் படங்களுக்கும் தனித்துவமான பங்களிப்பை செய்திருக்கிறார்.
ஆரம்பம்
அஜித்துடன் ஓம் பிரகாஷ் முதலில் பணியாற்றியது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான ஆரம்பம் படத்தில் தான். விடாமுயற்சி படத்தைப் போலவே ஆரம்பம் படத்திலும் அஜித்தை செம ஸ்டைலாக காட்டியிருப்பார்.
இந்த படங்கள் தவிர்த்து காஷ்மோரா , அறம் , நீதான் என் பொன்வசந்தம் , வெப்பம் ஆகிய தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழ் தவித்து இந்தி , தெலுங்கு மொழி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
குவியும் பாராட்டுக்கள்
பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் ஓம் பிரகாஷூக்கு விடாமுயற்சி படத்தில் பெரியளவில் கவனம் கிடைத்துள்ளது. படத்தின் ஓவ்வொரு ஃபிரேமும் உலகத் தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.