விடாமுயற்சி (vidaamuyarchi): இரண்டு வருடங்களுக்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடன் நாடு முழுவதும் இன்று வெளியானது ‘விடாமுயற்சி’ திரைப்படம்.  

 


நடிகர் அஜித்குமார் நடிப்பில் 'விடாமுயற்சி' திரைப்படம் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு பல பிரச்சினைகளை கடந்து இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் சார்பில் மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 


இந்த நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற பல மாவட்டங்களில் உள்ள திரையரங்கில் காலை 9 மணி ரசிகர் காட்சி வெளியாகி உள்ளது.  இதனை கொண்டாடும் விதமாக காலை முதலே அஜித் ரசிகர் காத்திருந்தனர். பின்னர் திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பிலிருந்து சீனிவாசா திரையரங்கம் வரை மேலதாளத்துடன் விடாமுயற்சி அஜித் கெட்டப்பில் ரசிகர் ஒருவர் நடனமாடிக் கொண்டும் நடந்தும் சென்றது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்தார்.

 

அதேபோல் விழுப்புரம் பகுதியில் உள்ள கல்யாண் திரையரங்கில் ரசிகர்கள், அஜித் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்து, "கடவுளே அஜித் ", "AK வாழ்க",மற்றும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அஜித்", என கோஷமிட்டு கோலாகலமாக அஜித்தின் விடாமுயற்சி படத்தை  ரசிகர்கள் கொண்டாடினர்.


 

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் இன்று நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் இரண்டு திரையரங்கில் வெளியாகி உள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ரசிகர் காட்சிக்காக காலை முதலே அஜித் ரசிகர் காத்திருந்தனர். 9 மணிக்கு படம் வெளியானதால் அப்பகுதியில் உள்ள பள்ளி கல்லூரி அலுவலகத்திற்கு சொல்வோர் நடந்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


விடாமுயற்சி விமர்சனம்


வழக்கமான எந்த வித ஆடம்பரமும் இல்லாமல் படம் தொடங்கியதும் கதை தொடங்கிவிடுகிறது. அஜித்திற்கு என்று தனியாக மாஸான அறிமுக காட்சி ஏதும் இல்லை என்றாலும் சவாதீகா பாடல் ஒரு நல்ல ஓப்பனிங் மூடை செட் செய்கிறது.


முதல் பாதி


முதல் அரை மணி நேரத்திற்கு அர்ஜூன் கயல் யார் இவர்கள் எப்படி சந்தித்துக் கொண்டார்கள், ஏன் பிரிகிறார்கள் என்பதை முன்னும் பின்னுமான காட்சிகளில் சொல்லப்படுகிறது. இடையிடையில் ஆரவ் , ரெஜினா, அர்ஜூன் என அடுத்தடுத்த கதாபாத்திரங்கள் அறிமுகமாகின்றன. ஏற்கனவே படத்தின் கதை தெரிந்தது என்பதால் த்ரிஷா காணாமல் போய் படம் கொஞ்சம் விறுவிறுப்பாக மாற நாம் பொறுமை காக்க வேண்டியிருக்கிறது. மொழி தெரியாத நாட்டில் தனி நபராய் அஜித் தனது மனைவியை தேடி அலையும் காட்சிகள் அடுத்தடுத்து தொடர்கின்றன. நாம் எதிர்பார்த்து காத்திருந்த ட்விஸ்ட் வைத்து இண்டர்வல் ப்ளாக் விடுகிறார்கள்.


இரண்டாம் பாதி


முதல் பாதியில் யார் வில்லன் என்கிற கேள்வியோடு தொடரும் கதை இரண்டாம் பாதியில் வில்லன்களின் நோக்கம் என்ன என்பதை மையமாக வைத்து தொடர்கிறதும். இனிமேலாவது படம் கொஞ்சம் சூடு பிடிக்கும் என நம்பி பொறுமை காத்து செகண்ட் ஆஃப் வரை வந்த  ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம். மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு கடைசியில் படத்தை முடிக்கிறார்கள்.