பாலிவுட் பிரபல பிரபலங்கள் கத்ரீனா கைஃப் மற்றும் சல்மான் இணைந்து நடித்த  'டைகர் 3' திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த நவம்பர் 12ம் தேதி வெளியானது. இப்படத்தில் நடிகர் இம்ரான் ஹாஷ்மி வில்லனாக நடித்திருந்தார். மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தில் கத்ரீனாவின் ஆக்ஷன் காட்சிகளை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினார்கள். அதிலும் குறிப்பாக மற்றுமொரு பெண்ணுடன் கத்ரீனா டவலுடன் சண்டையிடும் காட்சி வெளியான நாள் முதல் எக்கச்சக்கமான பாராட்டை பெற்று கொடுத்தது. 


 



சாம் பகதூர் ப்ரோமோஷன் :


கத்ரீனா கைஃப் கணவரும் பாலிவுட் முன்னணி நடிகருமான விக்கி கௌஷல் தனது வரவிற்கும் படமான 'சாம் பகதூர்' படத்தின் விளம்பர பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். மேக்னா குல்சார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் சன்யா மல்ஹோத்ரா, பாத்திமா சனா ஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதே நாளில் ரன்பீர் கபூரின் 'அனிமல்' திரைப்படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 'சாம் பகதூர்' படத்தின் ப்ரோமோஷன் சமயத்தில் நடிகர் விக்கி கௌஷலிடம் தன்னுடைய மனைவி கத்ரீனா கைஃப் டவல் ஆக்ஷன் காட்சி குறித்து கேட்கப்பட்டது. 


விக்கி கௌஷல் பூரிப்பு:


அதற்கு விக்கி கௌஷல் பதில் அளிக்கையில் "டைகர் 3 படத்தை நாங்கள் இருவரும் சேர்ந்து தான் பார்த்தோம். டவல் காட்சி வந்த போது நான் அவரிடம் 'இனிமேல் நான் உன்னுடன் வாக்குவாதம் செய்யமாட்டேன். நீ என்னை டவல் அணிந்து அடிப்பதை நான் விரும்பவில்லை. நீ பாலிவுட்டின் மிக அற்புதமான நடிகை' என்றேன். அவர் அந்த ஆக்ஷன் காட்சியில் நடித்தது நம்பமுடியாதது. அவரின் கடினமான உழைப்பை பார்த்து நான் பெருமை அடைகிறேன். அது எனக்கு ஊக்கமளிக்கிறது" என்ற விக்கி கௌஷல். 


 



கத்ரீனா விளக்கம் :


"டைகர் 3 " திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் கத்ரீனா கைஃப் டவல்  காட்சி குறித்து நேர்காணல் ஒன்றில் பேசி இருந்தார். "டவல் பைட் காட்சி மிகவும் கடினமானது. நீராவி ஹாம்மமுக்குள் கைகோர்த்து சண்டையிட வேண்டி இருந்தது. அதனால் தடுப்பது, உடைப்பது எல்லாம் சிரமமாக சவாலாக இருந்தது.  இரண்டு பெண்களுக்கு இடையே இது போன்ற ஒரு சண்டை காட்சி இதுவரையில் சினிமாவில் வந்து இருக்குமா என தெரியவில்லை. ரிஸ்க் எடுத்து ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் ஒரு படி மேலே சென்று ஆக்ஷன் காட்சிகள் செய்ய வாய்ப்பு கிடைத்தது. 'டைகர் 3' படத்தில் சோயா கதாபாத்திரத்தில் நடித்த என்னை ஒரு ஆணுக்கு சமமாக சண்டையிட்ட ஒரு பெண்ணாக பார்க்கிறார்கள்" என பேசி இருந்தார்.