சாவா திரைப்படம்
இந்தியில் விக்கி கெளஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்து கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான படம் சாவா. லக்ஷ்மன் உடேக்கர் இப்படத்தை இயக்கியுள்ளார். சிவாஜி சாவந்த் எழுதிய மராத்திய நாவலை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. லக்ஷ்மன் உடேகர் இப்படத்தை இயக்கியுள்ளார். மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜி மகாராஜ் மற்றும் முகலாயர்களுக்கு இடையிலான போரை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. சம்பாஜி மன்னரின் மனைவி ஏஸுபாயாக ராஷ்மிகா நடித்துள்ளார். சம்பாஜி மகாராஜ் தனது 22 ஆவது வயதில் அரசராக பதவி ஏற்று 9 ஆண்டுகள் முகலாயர்களிடம் போரிட்டு தனது ஆட்சியை காப்பற்றியதே இப்படத்தின் மையக்கதை.
பாராட்டுக்களை அள்ளும் சாவா
இந்து அரசர்களைப் பற்றிய நிறைய கதைகள் தொடர்ச்சியாக இந்தியில் படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் பல படங்கள் இஸ்லாமிய அரசர்களை தவறாக சித்தரிப்பதாக விமர்சனங்களும் இருந்து வருகிறது. அந்த வகையில் உரி , சர்தார் உத்தம் சிங் , தற்போது சாவா என தொடர்ச்சியாக தேசப்பற்றை மையமாக கொண்ட படங்களில் நடித்து வருகிறார் நடிகர் விக்கி கெளஷல். தற்போது சாவா திரைப்படத்திலும் அவரது நடிப்பு பலரால் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. படத்திற்கு இந்தி மொழி ரசிகர்களிடம் பாசிட்டிவான வரவேற்பு கிடைத்துள்ளது
சாவா படத்தின் வசூல்
சாவா திரைப்படம் முதல் மூன்று நாட்களில் இந்தியளவில் 116.5 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. முதல் இரண்டு நாட்களைக் காட்டிலும் மூன்றாவது நாளான இன்று படத்தின் வசூல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.