நடிகர் சிவகார்த்திக்கேயன் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகி திரைப்படத்திற்கு மதராஸி என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சிவகார்த்திக்கேயனின் 23வது படமாகும்.
ஏ.ஆர் முருகதாஸ்:
தீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்தடம் பதித்தவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். அதன் பின்னர் ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்காட் போன்ற ஹிட் படங்களை கொடுத்து அசத்தி இருந்தார். ஆனால் இவர் இயக்கத்தில் வெளியான ஸ்படைர், தர்பார் திரைப்படங்கள் தோல்வியடைந்தது. இதன் பின்னர் சிறிது காலம் படங்களை இயக்காமல் இருந்த அவர் ஹிந்தியில் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இதற்கிடையில் சிவகார்த்திக்கேயனின் 23வது படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தை பற்றிய அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பானது 2024 ஆண்டு தொடங்கியது.
இதையும் படிங்க: புது அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன்! மதராஸியின் பராசக்தியாக முருகதாஸ், சுதா கொங்கரா!
இந்த படத்தை குறித்த அப்டேட் நீண்ட காலமாக வராமல் இருந்த நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான இன்று இப்படத்திற்கு மதராஸி என்று பெயரிடப்பட்டுள்ளது.
பழைய டைட்டில்கள்:
நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் பழைய படங்களின் டைட்டிலுக்கும் அப்படி ஒரு ராசி உள்ளது. இப்போது வைக்கப்பட்டுள்ள மதராஸி என்ற தலைப்பு 2006 ஆம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளியான மதராஸி என்கிற படத்தின் பெயர் தான்.
இது மட்டுமில்லாமல் தற்போது அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து வரும் பராசக்தி பெயரும் சிவாஜி நடிப்பில் மெகஹிட் அடித்த பராசக்தி படத்தின் பெயர் தான். இதற்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, வேலைக்காரன், மாவீரன், அமரன் திரைப்படங்கள் அனைத்தும் பழைதிரைப்படங்களின் பெயர்கள் தான். இந்த படங்கள் அனைத்துமே சிவகார்த்திகேயனுக்கு நல்ல ஹிட்டாக அமைந்தது. இதே போல் மதராஸி மற்றும் பராசக்தி திரைப்படங்களும் ஹிட்டடிக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.