தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன் படம். ரஜினிகாந்த் படம் என்றாலே எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருக்கும். வேட்டையன் படத்திற்கும் அதேபோல மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
நாளை மறுநாள் ட்ரெயிலர் ரிலீஸ்:
இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் ட்ரெயிலர் நாளை மறுநாள்( அக்டோபர் 2ம் தேதி) ரிலீசாக உள்ளது. இதை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. என்கவுன்டரை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன்:
ரஜினிகாந்த் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இவருடன் இந்திய திரையுலகின் மற்றொரு சூப்பர்ஸ்டாரான அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் மனைவியாக நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ளார். இவர்களுடன் பிரபல நடிகர்களான பகத் பாசில், ராணா, ரித்திகா சிங், அபிராமி, துஷாரா விஜயன், கிஷோர் என பலரும் நடித்துள்ளனர். படத்தில் என்கவுன்டர் அதிகாரியாக ரஜினிகாந்தும், அதை எதிர்க்கும் அதிகாரியாக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர்.
இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ள படம் என்பதால் இந்த படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் இதுவாகும். ரஜினிகாந்த் தற்போது கூலி படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.