Behind The Song வரிசையில் ஒரு தலை ராகம் படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் பற்றி மறைந்த பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் பேசியதை காணலாம். 


1980 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் பன்முக கலைஞரான டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான படம் “ஒரு தலை ராகம்”. இப்படத்தை இ.எம்.இப்ராகிம் தயாரித்தார். இந்த படத்தில் ஷங்கர், உஷா ராஜேந்தர், ரவீந்திரன், ரூபா தேவி, தியாகு, வாகை சந்திரசேகர்,ரவீந்தர், சந்திரசேகர் என பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பாடல் வரிகள், இசை என பிற பணிகளையும் டி.ராஜேந்தர் மேற்கொண்டிந்தார். இந்த படம் சூப்பரான வெற்றியைப் பெற்று டி.ஆர். பெருமையை ஊரறிய வைத்தது.



இந்த படத்தில் என் கதை முடியும் நேரம், நான் ஒரு ராசியில்லாத ராஜா, வாசமில்லாத மலரிது, கூடையிலே கருவாடு என அனைத்து பாடல்களும் அன்றைய காலக்கட்டத்தில் பட்டித்தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. இதில் 2 பாடல்களை மறைந்த பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் பாடியிருந்தார். 



ஒரு நேர்காணல் ஒன்றில் பேசிய டி.எம்.சௌந்தரராஜன், “ஒரு தலை ராகம் படத்தில் பாடிய பிறகு தான் திரையுலகில் எனக்கு மார்க்கெட் போனது. என் பெயர் சௌந்தர்ராஜன். அதில் இடம்பெற்ற பாட்டு “நான் ஒரு ராசியில்லாத ராஜா”. அந்த படத்தின் மூலம்  டி.ராஜேந்தர் கோடி கோடியாக சம்பாதித்து விட்டார். அவர் என்னிடம் நான் பாட வேண்டிய பாடல்களை பாடி காட்டினார். நீ எனக்கு பாடி காட்ட வேண்டாம் என நான் சொல்லிவிட்டேன்.


மேலும் என் வாயில் இருந்தே நான் ஒரு ராசியில்லாதவன் வருகிறதே என சொன்னேன். அதற்கு டி.ராஜேந்தர், படத்துல ஹீரோ தான் சார் பாடுவாரு. நீங்க ஏன் கவலைப்படுறீங்க? என கேட்டார். எவ்வளவோ சொல்லி பார்த்தேன். டி.ராஜேந்தர் கேட்கவே இல்லை. அதுமட்டுமல்லாமல் அதே படத்தில் என் கதை முடியும் நேரம் இது என்ற ஒரு பாட்டும் இருந்தது. இந்த பாட்டுகள் பாடியதால் என் மார்க்கெட் போய்விட்டது என சொல்லக்கூடாது. புதிய பாட்டுக்கள் வந்ததால் தான் இந்த டி.எம்.சௌந்தர்ராஜனின் அருமை வெளியே தெரிந்தது” என தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க: Thalapathy Vijay: ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!