அசுரன், பாவக் கதைகளின் ஒரு இரவு பாகம் ஆகியவற்றைத் தொடர்ந்து விஜய் சேதிபதி நடிக்க வெற்றிமாறன் இயக்கும் படம் 'விடுதலை'. 


இசைஞானியுடன் முதன்முறையாக...


தேசிய விருது வென்ற இயக்குநரான வெற்றிமாறன், இப்படத்தில் முதன்முதலாக இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுகிறார்.


இப்படம், தமிழின் சமகால எழுத்தாளர் ஜெயமோகனின் ’துணைவன்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்படத்தில் விஜய் சேதுபதி தவிர, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் சூரி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


 






இரண்டு பாகங்கள்?


இப்படத்தின் படப்பிடிப்புத் தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை முன்னதாக விஜய் சேதுபதி தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.


இந்நிலையில், இப்படம் குறித்த மற்றொரு அப்டேட்டாக படம் இரண்டு பாகங்களாக வெளிவரலாம் எனும் தகவல் கசிந்துள்ளது. படத்தின் நீளம் காரணமாக இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகலாம் என்றும், முதல் பாகம் வெளியாகி அடுத்த மூன்று மாதங்களில் இரண்டாம் பாகம் வெளியாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






இப்படத்தில் நக்சல் போராளியாக விஜய் சேதுபதி நடிக்கும் நிலையில், படத்தின் ஷூட்டிங், சத்தியமங்கலம், பண்ருட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் நடைபெற்றுள்ளது.