விடுதலை 2


வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் விடுதலை. சூரி நாயகனாக நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் முடிவடையும்போதே, இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்புடன் முடிந்திருக்கும். படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.


ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் நாளை உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது. முதல் பாகமானது சூரியைச் சுற்றி கதை அமைக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த இரண்டாம் பாகமானது விஜய் சேதுபதியை சுற்றி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஏ சான்றிதழ்


முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகத்தில் அதிகப்படியான வன்முறை காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் . முன்னெச்சரிக்கைஇயாக 18 வயதிற்கு குறைவானவர்கள் இந்த படத்தை  தவிர்க்கும் விதமாக படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது  படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் இருந்த நிலையில் தற்போது படத்தில் இருந்து 8 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. 


சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி 


விடுதலை 2 படத்திற்கு அதிகாலை 9 மணி சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. வழக்கமாக வெற்றிமாறன் படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பு இருக்கும். அசுரன் , விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு ஃபேமிலி ஆடியன்ஸிடமும் வரவேற்பு இருந்தது. தற்போது இரண்டாம் பாகத்திற்கும் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் 


திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் நடத்தும் நேரத்தை அதிகப்படுத்துவதால், சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படாமலும், திரைப்படம் காண்போரின் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என்றும், மேலும், மக்கள் மற்றும் பார்வையாளர்கள் திரளாக உள்ளே வரவும், சிரமமின்றி வெளியேறவும், திரையங்கத்தினை சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரிக்கவும், போதுமான இடம் மற்றும் கால இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன், இன்ஃபோடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட், நிறுவனத்தார் கோரிய "விடுதலை பாகம்-II" என்ற தமிழ் திரைப்படத்திற்கு 20.12.2024 அன்று காலை 9 மணிக்கு ஒரு சிறப்பு காட்சியினை திரையிட அனுமதி வழங்குவது குறித்து, தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை விதிகள், 1957-68TUL9. உரிய விதிமுறைகளுக்குட்பட்டு, அரசளவில் முடிவெடுக்கலாம் " என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.