ராயன்


தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடித்துள்ள 50 ஆவது படம் ராயன். ராயன் படத்தின் வெற்றிக்கும் 50 படங்கள் என்கிற மைல் கல்லை எட்டியுள்ள தனுஷிற்கும் தமிழ் திரையுலகினர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Continues below advertisement


வெற்றிமாறன்


தனுஷின் ஆதர்ஷ இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் வெற்றிமாறன் ராயன் படத்திற்கு தனது வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார். தனுஷின் கடின உழைப்பிற்காகவும் சினிமா மீது அவர் கொண்டிருக்கும் காதலுக்காகவும் ராயன் படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.


பாரதிராஜா






இயக்குநர் இமயம் பாரதிராஜா ராயன் படத்தின் வெற்றிக்கு தன் வாழ்த்தை பதிவு செய்துள்ளார். திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் மற்றும் பாரதிராஜா இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத் தக்கது.


சூர்யா மற்றும் கார்த்தி 






ராயன் படத்தின் வெற்றிக்கு நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா இருவரும் வாழ்த்து பதிவிட்டுள்ளார்கள்.


ஜி.வி.பிரகாஷ் குமார்






தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வாத்தி ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜி.வி பிரகாஷ் ராயன் படத்தின் வெற்றிக்கு தன் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.