Asuran Team Again; மீண்டும் இணையும் அசுர கூட்டணி; சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி...

திரைத்துரையில ஒரு அசுர கூட்டணி மறுபடியும் இணைய இருக்கு. அது தொடர்பா, ஆர்எஸ் இன்ஃபோடெய்ன்மெண்ட் நிறுவனம் வெளியிட்டுருக்கற ஒரு அறிவிப்பு, சினிமா ரசிகர்கள மகிழ்ச்சியில ஆழ்த்தியிருக்கு.

Continues below advertisement

சினிமால, ஒரு பெரிய இயக்குனர், ஒரு பெரிய ஸ்டாரோட இணையும்போது, அந்த படத்தோட அறிவிப்பு வெளியாகும் போதுல இருந்தே, ரசிகர்கள் மத்தில ஒரு எதிர்பார்ப்பு உருவாகிடும். அந்த படத்த பத்தின தகவல்கள தொடர்ந்து தேடிட்டே இருப்பாங்க. அப்படி ஒரு அறிவிப்பதான் ஆர்எஸ் இன்ஃபோடெய்ன்மெண்ட் நிறுவனம் வெளியிட்டு இருக்கு. அது என்னன்னு பார்க்கலாம்.

Continues below advertisement


விடுதலை 2 படத்தின் 25-வது நாளில் தயாரிப்பு நிறுவனம் ட்வீட்

RS Infotainment நிறுவன தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்து வெளியான விடுதலை படம் வெற்றிகரமாக 25-வது நாளை எட்டியுள்ளது. இன்றைய காலகட்டத்தில், ஒரு படம் 25 நாட்கள் ஓடுவது என்பது அரிதான விஷயமாகிவிட்ட நிலையில், இந்த வெற்றிக்கு நன்றி தெரிவித்து தயாரிப்பு நிறுவனம் ட்வீட் மற்றும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ரசிகர்கள், ஊடகத்துறையினர், விநியோகிஸ்தர்கள், திரையரங்கங்கள் மற்றும் திரைத்துறையினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் இளையராஜா, விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.


மீண்டும் இணையும் அசுரன் கூட்டணி

நன்றி தெரிவிக்கும் ட்வீட்டோடு, தாங்கள் தயாரிக்கும் புதிய படங்கள் குறித்த அப்டேட்டுகளையும் ஆர்எஸ் இன்ஃபோடெய்ன்மெண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஒரு மெகா கூட்டணி மீண்டும் இணையும் தகவலை வெளியிட்டு இருக்காங்க. ஆமாங்க, இயக்குநர் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணில மாபெரும் வெற்றிப் படமான அமைஞ்ச அசுரன் கூட்டணிதாங்க அது. கலைப்புலி தானு தயாரிச்சுருந்த அந்த படத்துக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்தாங்க.

இப்போ ஆர்எஸ் இன்ஃபோடெய்ன்மெண்ட் நிறுவனம், அந்த கூட்டணிய மறுபடியும் இணைக்கப்போறதா அறிவிச்சுருக்காங்க. அந்த ட்வீட்டில், தனுஷை வைத்து, வெற்றிமாறன் இயக்கும் தனது 9-வது படத்தை தங்கள் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியை வைத்து புதிய படம்

அதே ட்வீட்டில் மற்றொரு தகவலையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது வெற்றிப்பட நாயகனாக மாறியுள்ள சூரியை வைத்து, செல்ஃபி படத்தை இயக்கிய மதிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த விடுதலை பாகம்-1 படத்தை, மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து ஆர்எஸ் இன்ஃபோடெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது, சூரியை வைத்து மீண்டும் ஒரு படத்தை தயாரிப்பதாக அறிவித்திருப்பது, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Madha Gaja Raja Collection: அள்ளுது கலெக்ஷன்! முதல் நாளே இத்தனை கோடி வசூலா? மாஸ் காட்டும் மதகஜராஜா!

 

Continues below advertisement
Sponsored Links by Taboola