Madha Gaja Raja Box Office Collection: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஷால் நடிப்பில் மதகஜராஜா படம் நேற்று ரிலீசானது. 12 வருடங்களுக்குப் பிறகு இந்த படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

Continues below advertisement


மதகஜராஜா வசூல்:


முதல் நாளான நேற்று இந்த படம் மொத்தமாக 3 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, சிலர் மதகஜராஜா முதல் நாளில் 5 கோடி ரூபாய் வரை வசூலைக் குவித்துள்ளதாக கூறியுள்ளனர். படத்தின் முதல் நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகாவில்லை. 


படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள்  வெளியாகி வரும் நிலையில், அடுத்தடுத்த நாட்களில் தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பொங்கலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வந்த கேம்சேஞ்சர் படம் பெரியளவில் ரசிகர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. 

அதிகரிக்கும் காட்சிகள்:


பொங்கலுக்கு காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட சில படங்கள் நாளை ரிலீசாக உள்ளது. இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் படங்களில் குடும்பங்களுடன் அமர்ந்து கொண்டாடும் படமாக மதகஜராஜா அமைந்துள்ளது. முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான இந்த படத்தை நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி இயக்கியுள்ளார். 


பொங்கலுக்கு அடுத்தடுத்து ரிலீசாகும் படங்களில் ரசிகர்களின் வரவேற்பைப் பெறாத படங்களுக்குப் பதிலாக மதகராஜாவை திரையிடவும் சில திரையரங்குகள் திட்டமிட்டுள்ளன. மேலும், சில திரையரங்குகள் தற்போதே மதகஜராஜா படத்திற்கான காட்சிகளை அதிகரித்துள்ளன. 

அதிகரிக்கும் வசூல்:


விஷாலுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகைகள் அஞ்சலி, வரலட்சுமி நடித்துள்ளனர். மேலும், மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சீனு மோகன், சிட்டிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். சந்தானத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை கதாபாத்திரத்தில் பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். 


நீண்ட இடைவெளிக்குப் பிறகு நல்ல நகைச்சுவையான குடும்ப படமாக ரசிகர்ளுக்கு மதகஜராஜா அமைந்துள்ளதாக நேர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளதால் ரசிகர்கள் இந்த படத்தைக் கொண்டாடி வருகின்றனர். அடுத்தடுத்த நாட்களில் மதகஜராஜாவின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.