துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரகனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'கருடன்'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் வரும் மே 31ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.  இந்த விழாவில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 


 



 


இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில் "கருடன் படத்தை பொறுத்தவரையில் செந்தில், சூரி இருவருமே எனக்கு மிகவும் விருப்பமானவர்கள். பாலு மகேந்திரா சாரிடம் நானும் செந்திலும் வேலை பார்த்து வந்தோம். அப்போது "அது ஒரு கனாக்காலம்" படத்தின் ஷூட்டிங் சமயத்தில் பாலு மகேந்திரா சாருக்கு ஸ்ட்ரோக் வந்தது. அப்போது 60 நாட்கள் சாருடன் ஹாஸ்பிடலில், வீட்டில் என எல்லா இடத்திலும் அவருடனே இருந்தது செந்தில் தான். அவருக்கு தேவையான அனைத்து பணிவிடைகளையும் செந்தில் தான் செய்தான். இதெல்லாம் எப்படி நீ பண்றன்னு நான் கேட்டபோது எங்க அப்பாவுக்கு நான் பண்ணமாட்டேனா? அந்த மாதிரி தான் நான் பண்ணேன் அப்படினு சொன்னான். இது தான் செந்தில். எல்லா மனிதருக்குள்ளும் நிறை குறை என்பது நிச்சயம் இருக்கும். செந்திலிடம் இருக்கும் அளவு கடந்த அன்பு தான் நிறை. எந்த ஒரு சூழலிலும்  யாருடனும் எந்த ஒரு மனஸ்தாபமும் இல்லாமல் உறவை வைத்து கொள்ளும் ஒரு நல்ல மனிதர். 


 


 



விடுதலை படத்திற்கு முன்னர் இரண்டு மூன்று தடவை தான் நானும் சூரியும்  பார்த்து இருக்கோம். அவ்வளவு தான். விடுதலை படத்திற்கு பிறகு தான் நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள ஆரம்பித்தோம். சசிகுமார் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க சூரி தான் காரணம். இந்த படம் சசிகுமாருக்கு நல்ல ஒரு பெயரை பெற்று கொடுக்கும். அந்த அளவுக்கு வெயிட்டேஜ் உள்ள ஒரு கேரக்டர் என்றாலும் அவர் சூரிக்காக மட்டும் தான் நடிக்க சம்மதம் கொடுத்துள்ளார். அதுக்கு அவருக்கு பெரிய மனசு இருக்கணும். 


சமுத்திரக்கனி இப்படத்தில் நடிக்கிறார் என்பது படத்துக்கு நம்பகத்தன்மையை கொடுக்கிறது. மக்களோடு மிகவும் நெருக்கமான கனெட் செய்ய கூடியவர். படத்தின் இசை, ஸ்டண்ட், ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்றும் அனைவரின் நடிப்புமே மிக சிறப்பாக அமைந்துள்ளது. நிச்சயம் இப்படம் ஒரு வெற்றி படமாக அமைய வாழ்த்துக்கள்" என பேசி இருந்தார் இயக்குநர் வெற்றிமாறன்.