பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்ரி லஹ்ரி உடல்நல பாதிப்பு காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். 69 வயதான அவர், மும்பை கிரிட்டிகேர் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். “டிஸ்கோ கிங்” என புகழ்பெற்ற பப்பி லஹ்ரிக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். கோலிவுட்டை பொறுத்தவரை, அபூர்வ சகோதரிகள், பாடும் வாணம்பாடி, கிழக்கு ஆஃப்ரிக்காவில் ஷீலா ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
பப்பி லஹ்ரியின் மறைவுக்கு பிரதமர் மோடி, இரங்கல் தெரிவித்திருக்கிறார். “தலைமுறை தாண்டியும் பப்பி லஹ்ரியின் இசை ஒலிக்கும். அவரது மறைவு மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் ஓம் சாந்தி” என தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லஹ்ரி, சிகிச்சை எடுத்து கொண்டார். சில நாட்களில் உடல்நலம் தேறி மருத்துவமனையில் இருந்து விடைப்பெற்றார். இந்த ஆண்டு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டு கடந்த திங்கட்கிழமை வீட்டுக்கு திரும்பினார். ஆனால், மீண்டும் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதில் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
தலைவர்கள் இரங்கல்:
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்