மலையாள திரையுலகின் முனோடி இயக்குநரான கே.ஜி. ஜார்ஜ் இன்று காலமானார்.
கே.ஜி.ஜார்ஜ்
பிரபல மலையாள இயக்குனர் கே ஜி ஜார்ஜ் இன்று காலமானார். அவருக்கு வயது 77. கேரளத்தில் குளக்கட்டிலில் 1946 ஆம் ஆண்டு மே மாதம் பிறந்தார் கே ஜி ஜார்ஜ். சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தினால் புனேவில் இருக்கும் இந்திய திரைப்பட நிறுவனத்தில் பயின்றார். முறையாக சினிமாவைப் பயின்று பிரபல மலையாள இயக்குனர் ராமு காரியத்திடம் சில காலம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜார்ஜ் 1975 ஆம் ஆண்டு சொப்பனதானம் என்கிற தனது முதல் படத்தை இயக்கினார். தனது முதல் படத்திற்காக சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் வென்றார்.
திரை வாழ்க்கை
இவரது முதல் படமான ஸ்வப்னதானம் வழக்கமான கமர்சியல் திரைப்படங்களைப் போல பாடல்கள் சண்டைக்காட்சிகள் என்று இல்லாமல் தனித்துவமான ஒரு முயற்சியாக இந்த படம் இருந்தது. அதே நேரத்தில் மக்களிடத்தில் நல்ல வரவேற்பையும் இந்த படம் பெற்றது கேஜி சார்ஜ் ஏ கேவனிகா திரைப்படம் ஒரு சிறந்த புலனாய்வு திரைப்படத்திற்கான உதாரணமாக இன்று வரை சினிமா ஆர்வலர்களால் பாராட்டப்படுகிறது
தனது திரை வாழ்க்கையில் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய கேஜி ஜார்ஜ் மலையாள சினிமா வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கினார். உள்கடல் மேலா, லேகாயுடே மரணம் ஒரு பிளார்ஷ்பேக் யவனிகா உள்ளிட்டப் படங்கள் இவரது புகழ் பெற்ற படங்களாக கருதப்படுகின்றன. மேலும் இவரது திரை வாழ்க்கையை பாராட்டும் வகையில் கேரள அரசு கேரள மாநிலத்தின் உயரிய விருதான ஜே சி டேனியல் விருதை இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது. 1988 ஆம் ஆண்டு எலவம்கோடு என்கிற தனது கடைசி படத்தை இயக்கினார் ஜார்ஜ் இதற்குப் பிறகு பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு கேரள முதியோர் இல்லத்தில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்தார் ஜார்ஜ்.
இறுதி அஞ்சலி
இந்நிலையில் இன்று காக்க நாட்டில் தனது வீட்டில் உயிரிழந்தார் அவருக்கு செல்மா என்கிற மனைவியும் தாரா மற்றும் அருள் என்கிற மகளும் உள்ளன. கே ஜி சார்ஜின் இறுதிச்சடங்கு காக்க நாட்டில் உள்ள அவரது வீட்டில் இன்று பிற்பகல் நடைபெறும் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர் மலையாள சினிமாவின் மூத்த இயக்குனரின் இறப்பை தொடர்ந்து மலையாள பிரபலங்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள் பல்வேறு இளைய தலைமுறை இயக்குனர்களுக்கு ஆதர்சமான இயக்குனராக இருந்துள்ளார் கே ஜி ஜார்ஜ். சமகாலத்தில் மலையாள சினிமாவில் பாராட்டப்படும் இயக்குநரான லிஜோ ஜோஸ் பெல்லிஸேரி தனக்கு பிடித்த இயக்குநராக கே ஜி ஜார்ஜை குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.