தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரமான நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜின் 'லியோ' படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (The G.O.A.T) படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா, பிரசாந்த், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகி பாபு, விடிவி கணேஷ், மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி அமரன், சினேகா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திர்ல் நடித்து வரும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் கீழ் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 


புதிய அப்டேட் :


இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மிகவும் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கடந்த வாரம் ரஷ்யாவில் நடைபெற்ற ஷூட்டிங்கில் கலந்து கொள்ள விஜய் வெளிநாடு கிளம்பிய தகவல் வெளியானது. அந்த வகையில் தி கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து The G.O.A.T படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கியது என்ற அப்டேட்டை கொடுத்துள்ளார். இந்த அப்டேட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.


ப்ரீ கிளைமாக்ஸ் :


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ம் தேதி தி கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதால் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மேலும் திரை ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் ப்ரீ கிளைமாக்ஸ் காட்சியில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் AI கேமியோ வீடியோ கிட்டத்தட்ட 2.5 நிமிடங்களுக்கு இடம்பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. 


சினிமா டூ அரசியல் :


'The G.O.A.T ' படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக கமிட்டாகியுள்ள படத்தில் நடித்ததற்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகி முற்றிலுமாக தனது 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் பணிகளில் முழுமையாக ஈடுபட உள்ளார் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அவரின் கடைசி படத்திற்கு முந்தைய படம் என்பதால் தி கோட் திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் ஸ்பெஷல் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.