தி கோட் ( The GOAT)


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் முதல் பாடல் விசில் போடு வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கு மதன் கார்க்கி வரிகளை எழுதியுள்ளார். விஜய் இந்தப் பாடலை பாடியுள்ளார். பார்ட்டி ஒன்ன தொடங்கட்டும்மா என்று எடுத்த எடுப்பிலேயே தனது அரசியல் வருகையை நினைவுபடுத்துகிறார் விஜய். பிரஷாந்த் , பிரபுதேவா , அஜ்மல் , விஜய் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து இந்தப் பாடலில் வெறித்தனமாக நடனமாடி கலக்கியிருக்கிறார்கள். 


விசில் போடு லிரிக்ஸ் ( Whistle Podu Lyrics)


பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா


அதிரடி கெளப்பட்டுமா


கேம்பேயினதான் தொறக்கட்டுமா


மைக்க கையில் எடுக்கட்டுமா 


(வாய்ஸ் ஓவர்) : ஏய் என்னா சொன்ன ?


ஷேம்பேயின தொறக்கட்டுமானுதான் சொன்னேன்


ஷேம்பெயினா என்காதுல கேம்பேயின்னு கேட்டுது 


டேய் மப்புல அப்டிதாண்டா கேட்கும் . கரெக்டா கேளு.. ஸ்டார்ட் மியூசிக்


பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா. அதிரதி கெளப்பட்டுமா


ஷேம்பேயின தான் தொறக்கட்டுமா மைக்க கையில் எடுக்கட்டுமா


இடி இடிச்சா என் வாய்ஸுதான்


வெடி வெடிச்சா என் பாய்ஸுதான் 


குடிமக்காதான் நம் கூட்டணி


பார்ட்டி விட்டுதான் போமாட்ட நீ


சத்தம் பத்தாது விசில் போடு


குத்தம் பாக்காம விசில் போடு


ரத்தம் பத்தட்டும் விசில் போடு


ஹே நண்பி , ஹே நண்பா 


விசில் போடு


G.O.A.T க்கு விசில் போடு


ஆட்டோமேட்டிக்கா விசில் போடு


டிராகன் வேட்டைக்கு விசில் போடு


நண்பி , நண்பா விசில் அடி என்னோடு


 


கொண்டாடத்தான் நீ பொறந்த


காரணத்த ஏன் மறந்த


மத்த கண்ணில் சந்தோஷத்த


பாக்கத்தானே கண் தொறந்த


எதிரி ஹார்ட நீ ஸ்டீல் பண்ணிக்கோ


உன்மேல ஏன் கோவம் ஃபீல் பண்ணிக்கோ...


உனக்கு நீயே கால் பண்ணிக்கோ


உன் லைஃப அப்பப்போ டீல் பண்ணிக்கோ...


அந்த வானம் தேயாது


இந்த பூமி மாயாது


ஏ லாஸ்டு சொட்டு உள்ள வர இந்த பார்ட்டி ஓயாது.


 


ஏ தண்ணியில்ல ஊருக்குள்ள குயிலுங்க பாட்டெல்லாம் கேட்பதில்ல


கண்ண கட்டும் கண்ணீரில மயிலுங்க ஆட்டத்த பாப்பதில்ல...


மைக்கல் ஜாக்ஸன்னா மூன் வாக்கு..ஏ மார்லன் பிராண்டோனா டான் வாக்கு..


மாத்தம் வேண்டும்னா கோ வாக்கு


உங்க பார்ட்டிக்கும் தான் எங்க வாக்கு (கோரஸ்)


விசில் போடு (3)


நண்பி நண்பா விசில் அடி என்னோடு....


 


விஜய் படத்தில் அஜித் பட ரெஃபரன்ஸ்






பொதுவாக வெங்கட் பிரபு படம் என்றாலே அதில் தனித்துவமான சில சேட்டைகளை செய்துவைப்பார் வெங்கட்பிரபு. அதேபோல் இந்த பாடலிலும் வெங்கட் பிரபு சில சுவாரஸ்யமான அம்சங்களை சேர்த்திருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான முந்தையப் படங்களின் டைட்டில் கார்டுகளின் ஸ்டைலில்  ’தி கோட்’ படத்தின் டைட்டிலை இந்தப் பாடலை சேர்த்திருக்கிறார்கள். சென்னை 28, சரோஜா , கோவா , மங்காத்தா , பிரியானி , மாஸ் , மாநாடு ஆகிய படங்களின் டைட்டில் கார்டுகள் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக அஜித் நடித்த மங்காத்தா படத்தின் டைட்டில் கார்டு இந்த பாடலில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.