கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2, சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 மற்றும் இன்னும் பல படங்களின் அப்டேட்கள் வெளியாகியுள்ளன


தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் அப்டேட்


தமிழ் புத்தாண்டையொட்டி வரவிருக்கும் தமிழ் திரைப்படங்களின் அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏறகனவே விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக  இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் ராகவா லாரன்ஸ் , நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் அப்டேட்களும் வெளியாகியுள்ளன. தற்போது இந்தியன் 2 , அரண்மனை 4 மற்றும் இன்னும் சில படங்களின் அப்டேட்களை தற்போது பார்க்கலாம்.


இந்தியன் 2






ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.


அரண்மனை 4






சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா , ராஷி கண்ணா , யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் அரண்மனை 4. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஹிப்ஹாப் தமிழா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது அரண்மனை 4 படத்தின் முதல் பாடலான ‘அச்சச்சோ’ என்கிற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 


ராயன்






தனுஷின் 50 ஆவது படமாக உருவாகியுள்ளது ராயன் . தனுஷ் இந்தப் படத்தை இயக்கி நடித்துள்ளார். துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன் , பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம் , சந்தீப் கிஷன் , அபர்ணா பாலமுரளி. வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராயன் படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. 


மெட்ராஸ்காரன்


வாலி மோகன்தாஸ் இயக்கத்தில் மலையாள நடிகர் ஷேன் நிகம் , நடிகர் கலையரசன் , ஐஸ்வர்யா தத்தா, நிஹாரிகா கொனிடெலா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் மெட்ராஸ்காரன் . இப்படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.




மேலும் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது . சுசீந்திரன் இயக்கும் இந்தப் படத்திற்கு வள்லிமயில் என்று பெயர் வைக்கப் பட்டுள்ளது. டி. இமான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 


ஏ.ஆர்.எம்


மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் ஜிதின் லால் இயக்கியுள்ள ஏ.ஆர். எம் படத்தின் போஸ்டர் ஒன்றும் இன்று வெளியிடப் பட்டுள்ளது.




மற்றும் ஈரம் படத்தின் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடித்துள்ள சப்தம் படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளது