தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் தற்போது வெளியாக உள்ள திரைப்படம் தி கோட். நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கினார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய பிறகு 2 படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அறிவிப்பை வெளியிட்டார்.


தி கோட் படத்தில் அஜித்தா?


இந்த சூழலில், அவர் நடிப்பில் வெளியாக உள்ள கடைசி படத்திற்கு முந்தைய படம் தி கோட் ஆகும். கோட் படத்தை இயக்கும் வெங்கட் பிரபு நடிகர் அஜித்தின் 50வது திரைப்படமான மங்காத்தா படத்தையும் இயக்கியவர். மங்காத்தா படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய படம். மேலும், அந்த படத்தின்போது நடிகர் அஜித்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக வெங்கட் பிரபு மாறினார்.


இதனால், தற்போது வெங்கட்பிரபு தி கோட் படத்தை இயக்கியிருப்பதாலும், வெங்கட்பிரபுவின் ஒவ்வொரு படத்திலும் ஒரு சிறப்பு தோற்றம் இருக்கும் என்பதாலும் இந்த படத்தில் அஜித்தின் சிறப்பு தோற்றம் உண்டா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள்  மத்தியில் இருந்து வருகிறது.







பதில் சொன்ன வெங்கட்பிரபு:

இதுதொடர்பாக, தனியார் யூ டியூப் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த வெங்கட்பிரபுவிடம் அஜித் விஜய்க்கு கால் பண்ணி ஹலோ தளபதி என்று பேசுவது போல காட்சி இருக்கிறதா? என்று கேட்டபோது, கண்டிப்பாக அப்படி ஒரு தருணம் படத்தில் உள்ளது. நல்ல ஹை மொமன்ட். அவரது குரல் வருகிறதா? அவரது காட்சி வருகிறதா? என்று கூறமாட்டேன். ஆனால், அப்படி ஒரு தருணமா? என்று கூற முடியாது என்று வெங்கட்பிரபு கூறினார்.


வெங்கட்பிரபுவின் இந்த பேட்டி அஜித் ரசிகர்கள் மத்தியில்  மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தி கோட் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் நடித்துள்ளனர். பிரபல நடிகர் மோகன் வில்லனாக நடித்துள்ளார். லைலா, சினேகா ஆகியோரும் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.