The Goat Trailer : வேலைய்யா.. ஹய்யா.. புது லீடர்.. அட்டகாசமாக வெளியானது “The Goat' ட்ரெயிலர்

The Goat Trailer : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ள தி கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது

Continues below advertisement

தி கோட் (The Goat Trailer)

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தி கோட். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரசாந்த், பிரபு தேவா , சினேகா , லைலா ,மோகன் , மீனாக்‌ஷி செளதரி , வைபவ் , பிரேம்ஜி , ஜெயராம் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

Continues below advertisement

கடந்த ஜனவரி 1 ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வெளியான பாடல்கள் , போஸ்டர்கள் இது வழக்கமான விஜய் படமாக இருக்காது என்பதை உணர்த்தின.  வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கும் தி கோட் படத்தின் ட்ரெய்லரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola